Category: பிரதான செய்திகள்

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பு போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயின் அலுவலகம் முன்பாக பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்பெற்றுக்கொண்டிருக்கின்றது. 19 அமைப்புக்கள் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு  எந்தவித நிபந்தனைகளுமின்றி தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு போன்ற வாசகங்கள் ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இன்று வடமாகாணத்தில் சகல சேவைகளும் முடக்கம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று வடமாகாணத்தில் பூரண கர்த்தால் அனுட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்றைய நாள் காலை 9.30 மணியளவில் 19சமூக அமைப்புக்கள் இணைந்து இன்று ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். நாளையதினம் யாழ். இந்துக்கல்லூரியில் நடைபெற வுள்ள தமிழ்தின விழாவுக்கு சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளநிலையில் அவரது வருகைக்கும் எதிர்ப்புத்தெரிவிக்கப்பட்டு இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன், வவுனியாவில் நடைபெற்று வந்த மூன்று அரசியல்…

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்றார்!

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இன்று பதவி ஏற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழக ஆளுநராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ந்திகதி முடிவடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்திகதி தமிழக பொறுப்பு ஆளுநர் என்ற கூடுதல் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.…

ஐநா தீர்மானங்கள் அனைத்தையும் செய்வோம், ஆனால் வேகமாகச் செய்யமுடியாது – மைத்திரி உரை!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை உரையாற்றினார். அவ்வுரையில், போர்க்குற்றம், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்களை விரைவாகச் செய்யமுடியாது எனவும் மெதுவாகவே அவற்றினை நிறைவேற்றமுடியும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவரது உரையில் தெரிவித்திருப்பதாவது, 30 வருட யுத்தத்தை எதிர்கொண்ட ஒரு நாட்டில் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் விரைவாக செய்து முடிப்பது இயலாத காரியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடு தொடர்பில்…

மெக்சிகோ நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 250-ஐ கடந்தது

மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியை அடுத்துள்ள பியூப்லா மாநிலம் மற்றும் பிறபகுதிகளில் நேற்று 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. கடந்த 1985-ம் ஆண்டு இந்நாட்டை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். அந்த கோரச் சம்பவத்தின் 32-வது ஆண்டு நினைவு நாளன்று தற்போது மீண்டும் தாக்கிய இந்த நிலநடுக்கம் பள்ளிக்கூடங்கள், வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சொந்தமான பலமாடி கட்டிடங்களை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் தரைமட்டமாக்கியது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும்…

பாதுகாப்பு துறை மந்திரியாக நிர்மலா சீதாராமன் இன்று பொறுப்பேற்றார்

மத்திய மந்திரிசபை கடந்த 3-ந்தேதி மாற்றி அமைக்கப்பட்டது. வர்த்தக துறை இணை மந்திரியாக இருந்த தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்பு துறை ஒப்படைக்கப்பட்டது. பாதுகாப்பு துறை மந்திரியாக நிர்மலா சீதாராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திரா காந்திக்கு பிறகு பாதுகாப்பு துறைக்கு பொறுப்பேற்ற 2-வது பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.

எடப்பாடி அரசை கலைக்க கோரி டிராபிக் ராமசாமி திடீர் உண்ணாவிரதம்

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அலுவலகம் சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ளது. இன்று காலை 9 மணி முதல் அவர் தனது அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த திடீர் உண்ணாவிரதம் பற்றி அவர் கூறியதாவது:- தமிழகத்தில் மெஜாரிட்டி இல்லாத மைனாரிட்டி அரசு நடக்கிறது. எடப்பாடி பழனிசாமி தாமாகவே முன் வந்து பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்ய வில்லை. ஜனநாயகத்துக்கு விரோதமாக குதிரை பேரம் நடக்கிறது. இந்த ஆட்சி உடனே…

செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

71-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டை விழாக்கோலம் பூண்டுள்ளது. செங்கோட்டையில் நடைபெறும் கொடியேற்றும் நிகழ்ச்சி முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகௌடா ஆகியோர் கலந்து கொண்டனர். காலை 7 மணியளவில் செங்கொட்டைக்கு வருகை புரிந்த பிரதமர் மோடி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் சரியாக 7.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். பின்னர் நாட்டு மக்களுக்கு மோடி…

யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு

குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இட மாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்தி ருந்தது. அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டி ருந்தார்கள். ஆனால், முழுமையான முடிவுகளைப் பெறமுடியவில்லை. அன்று, பிற்பகல் 2.30 மணி, 23 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2016 ஆம் ஆண்டு. குடாநாட்டின் வெப்பநிலை 35 பாகை…

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் மணிமண்டபம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதில், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 91 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான இன்று (வியாழக்கிழமை) இந்த மணிமண்டத்தை திறந்து வைக்க ஏற்பாடு…