Category: கனடா

அதிருப்தியினால் கூட்டத்திலிருந்து வெளியேறினார் கிறிஸ்டியா ப்ரீலன்ட்

பெல்ஜியத் தலைநகர் பிரஸ்சல்ஸில், நேற்று (வெள்ளிக்கிழமை) ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போது அதிருப்தியடைந்த கனேடிய வர்த்தக அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலன்ட், கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளார்.…
ஐரோப்பிய ஒன்றிய – கனடா வர்த்தக ஒப்பந்தம் – கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் அவசர கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த ஒப்பந்தம் தொடர்பில், ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்ட்டின் (Martin Schulz), கனேடிய வர்த்தக அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலன்ட் (Chrystia Freeland) மற்றும் பெல்ஜியத்தின் வல்லோனியா பிராந்தியத்தின் தலைவர் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.  குறித்த பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து தெரிவித்த கிறிஸ்டியா, “ஐரோப்பாவின் பணிகளை நிறைவுக்கு கொண்டுவரும் தருணம் நெருங்கி விட்டது” என தெரிவித்துள்ளார்.  ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவுக்கு இடையில் பரந்த பொருளாதார சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் சுமார் ஏழு ஆண்டுகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  குறித்த ஒப்பந்தம் எதிர்வரும் வாரம் கைச்சாத்திடப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொழிலாளர், சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் தரம் ஆகியவற்றிற்கு எத்தகைய உத்தரவாதம் வழங்க முடியும் என்பது தொடர்பில் வெலோனா பிராந்தியம் கேள்வியெழுப்பியுள்ளமை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  எனவே குறித்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான இறுதிக்கட்ட முயற்சிகள் வலுவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் அவசர கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் தொடர்பில், ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்ட்டின் (Martin…
ஈராக்கின் மொசுல் நகரை மீட்கும் போரில் கனேடிய படைகளும் ஆதரவு

இஸ்லாமியத் தீவிரவாதிகளிடம் இருந்து ஈராக்கின் மொசுல் நகரை மீட்பதற்காகப் போரிடும் குர்தீஷ் போராளிகளுக்கு கனேடியப் படைகளும் ஆதரவு வழங்கி வருவதாக கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் தெரிவித்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த…
வியட்நாமை சென்றடைந்தது HMCS வான்கூவர்

கனேடிய கடற்படைக் கப்பலான HMCS வான்கூவர் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு, வியட்நாம் நாட்டின் ஹோ-சி-மின் நகரை ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி சென்றடைந்தது. கனேடிய கடற்படைக்கும், ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளின் கடற்படைக்கும் இடையே…
வாக்கு முறையை சீர்த்திருத்த வேண்டும் என்பதில் ஜஸ்ரின் உறுதி

வாக்கு முறைமையை சீர்த்திருத்த வேண்டும் என்பதில் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னோக்கி சிந்தனை மற்றும் மேம்பாடுகளை எதிர்நோக்கும் ஒரு…
சட்ட விரோத மருந்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் அதிக அளவில் சட்ட விரோத மருந்து அருந்தியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, அதிகரித்துள்ளதாக பொது சுகாதார அவசரமருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில், 2015ஆம் ஆண்டு 508…
Dr ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பங்குகொண்ட புதிய வெளிச்சம் கருத்துப் பகிர்வும் , மக்கள் சந்திப்பும் ஊடக அறிக்கை

புதிய வெளிச்சம் கருத்துப் பகிர்வும் , மக்கள் சந்திப்பும் பேராசிரியர் Dr ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பங்குகொண்டு இலங்கைத்தீவின் தமிழர் வாழும் பல்வேறு பகுதிகளிலும் 20 நாட்கள் 18 பெரு நிகழ்வுகளாக நடைபெற்ற புதிய…
நல்லெண்ண விஜயமாக வியட்நாம் சென்றுள்ள கனடிய கடற்படை கப்பல்

கனேடிய கடற்படைக் கப்பலான HMCS வான்கூவர் கப்பலானது நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு வியட்னாம் நாட்டின் ஹோ-சி-மின் நகரிலுள்ள செய்கன் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. இந்த நல்லெண்ண விஜயத்தின் போது இருநாட்டு கடற்படைகள் இடையேயான பாதுகாப்பு…
குடிவரவாளர்களின் எண்ணிக்கையை 50 வீதத்தினால் அதிகரிப்பது இலகுவானதல்ல

கனடாவில் குடிவரவாளர்களின் எண்ணிக்கையை 50 வீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்ற திட்டமானது அடைய கடினமான இலக்காகும் என கனேடிய குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலம் தெரிவித்துள்ளார். கனடா குடிவரவு நிலைகளை குறிப்பிடத்தக்க அளவு…
ஒன்ராறியோவில் ஆண்டு முழுவதும் நிலையான மின் கட்டணம்: மின்சார சபை

ஒன்ராறியோவில் இம்முறை குளிர்க்காலத்தின் போதும் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்படாது மாற்றம் இன்றி நிலையானதாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோவில் மே மாதம் மற்றும் நவம்பர் மாதங்களில் வருடத்தில் இரு முறை ஒன்ராறியோ மின்சார…