மத்திய பிரதேச அரசு பள்ளிகளில் சாதி பெயர்கள்

ekuruvi-aiya8-X3

mp_schoolமத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் சாத பெயரில் இயங்ககி வந்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது:

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிங்குரவ்லி மாவட்டத்தில் உள்ள துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் என 80க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் சாதிப்பெயரில் இயங்கி வந்துள்ளது. மேலும் பல பள்ளிகள் உயர் சாதிபெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

பள்ளிகளில் சாதிப்பெயரை நீக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் களமிறங்கியது. இது குறித்து மாவட்ட கலெக்டர் அனுராக் சவுத்ரி கூறுகையில்,

கடந்த மார்ச் மாதம் பள்ளிகளில் சாதிபெயரை அடையாளம் காணும் பணி துவக்கப்பட்டது.தொடர்ந்து பள்ளிகளில் சாதிபயெர் நீக்கப்பட்டு காந்தி ,நேரு, அம்பேத்கார், விவேகானந்தர், போன்ற தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Share This Post

Post Comment