எவன்கார்ட் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது

எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மஹேந்திரன் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் சிரேஷ்ட உதவி செயலாளரான சமன் ஶ்ரீ திசாநாயக்கவிடம் சாட்சிப் பதிவு மேற்கொள்ளப்பட்டது.

மேலதிக சாட்சி விசாரணைகள் நவம்பர் மாதம் 09ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில், மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து கொள்வதற்கு ரக்னா லங்கா தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோவுக்கு 355 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்கியதாக எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று பணம் வழங்கியது மற்றும் அரச உத்தியோகத்தர் என்ற வகையில் பணம் பெற்றுக் கொண்டமை ஆகியன இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் தண்டணைக்குறிய தவறு என்று தெரிவித்து இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Related News

 • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
 • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
 • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
 • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
 • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
 • கட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்
 • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
 • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *