பிரம்ரன் தமிழ் ஒன்றியம்-கனடா

பிரம்ரன் தமிழ் ஒன்றியமானது கனடாவில் 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுக் கடந்த 6 ஆண்டுகளாக இங்குள்ள தமிழ் மக்களுக்கும் தாயக உறவுகளுக்கும் அளப்பரிய சேவையாற்றி வருவதனை அனைவரும் நன்கறிவீர்கள். குறிப்பாக பிரம்ரனில் நடைபெறும் பல்கலாச்சார விழாவான கரபிராமின் மிகப்பெரும் நிகழ்வான ஈழம் சாவடி என்ற நிகழ்வை தொடர்ந்து வெற்றிகரமாக நடாத்திவருகின்றது என்றால் அது மிகையல்ல. இவ்விழாவில்

தமிழர்களின் பாரம்பரிய கலை கலாச்சாரப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் இயல் இசை நாடக நிகழ்வுகளும் தவில் நாதஸ்வர கச்சேரிகளும் தமிழர்களின் பயன்பாட்டிலிருந்த பொருட்களின் கண்காட்சியும் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது. இந்த வருடத்திற்கான ஈழம் சாவடி நிகழ்வு இம்மாதம் 13, 14, 15ம் திகதிகளில் வழமைபோல் மிகச்சிறந்த திட்டமிடலுடன் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

இத்துடன் தமிழ் மரபுத் திங்களைக் கொண்டாடும் முகமாக தைப்பொங்கல் விழாவும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருவதுடன் இங்குள்ள எமது சிறார்களுக்கு தமிழறிவுப் போட்டிகள் ஒழுங்குசெய்யப்பட்டுப் பரிசில்களும் வழங்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் பிரம்ரன் வைத்திய சாலைக்கும் வருடாவருடம் நிதி சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்ற மனிதாபிமானச் செயற்பாட்டையும் அறியத்தருவதில் பெருமையடைகின்றோம். இங்கு நடைபெறும் செயற்பாடுகள் இவ்விதம் இருக்க எமது தாயகத்தில் இன்னலுறும் எமது உடன்பிறப்புகளுக்கான அர்த்தமுள்ள செயற்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

தாயகம் நோக்கிய எமது கடந்த காலச் செயற்திட்டங்கள் பின்வருமாறு:

1) கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் வசிக்கும் மாணவர்களுக்குக் கணினிப்

பயிற்சிநெறிக்கான வகுப்பறைக் கட்டிடம் கட்டிக்கொடுத்துள்ளோம்.

2) போரினால் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு இயங்கமுடியாதவர்களுக்கான தொழிற் பயிற்சிககான கட்டிடம் மாங்குளத்தில் எமது ஒன்றியத்தின் பொருளாதார அனுசரணையுடன் கட்டப்பட்டுள்ளதுடன் இதன் திறப்பு விழாவிற்கு எமது அழைப்பின் பேரில் இலங்கைக்கான கனடாத்தூதுவர் கலந்து சிறப்பித்தமை வரலாற்றுச் சாதனையாகும்.

3) அம்பாறை மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தொழில்

வளர்ச்சிக்காக அரிசி அரைக்கும் ஆலை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான செயற்திட்டங்கள்:

1) மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயப்பண்ணை அமைக்கும் திட்டம்

2) வவுனியாவில் குடிநீர்த் தேவைக்கான கிணறு புனரமைக்கும் திட்டம்.

அவரவர் சொந்த அலுவல்களையே பார்க்கமுடியாமல் நேரப்பற்றாக்குறையைக் காரணங்காட்டும் இங்குள்ள வாழ்க்கைச் சூழலில் இத்தகைய அரிய செயற்பாடுகளை மனஞ்சலிக்காது தொடர்ந்து செயற்படுத்திவரும் எமது அமைப்பின் வளர்ச்சிக்கு ஊடகவியலாளர்களாகிய தாங்கள் தங்களது முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குவதுடன் யூலை 13, 14, 15ம் திகதிகளில் நடைபெறவிருக்கும் ஈழம் சாவடி நிகழ்வை வழமைபோல் வெற்றி விழாவாக்க எம்முடன் சேர்ந்து பணியாற்றுமாறு எமது ஒன்றியத்தின் சார்பில் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

“வாழ்வதற்குப் பொருள் வேண்டும் நாம் வாழ்வதிலும் பொருள் வேண்டும்”poster-carabram-BTA-2018-final EP-INVITATION


Related News

 • பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து
 • ஒஷ்வா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
 • புயல்காற்றின் எதிரொலி – அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது
 • ஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்
 • ரொறன்ரோவில் சாரதிகளுக்கு எச்சரிக்கை
 • சட்டவிரோத போதைப்பொருள் பாவனை – கனடாவில் நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழப்பு
 • அர்வாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
 • ரொறன்ரோ பகுதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *