பிரமாண்டமாக அமைகிறது ஈழம் சாவடி Carabram 2013 Eelam Pavilion july 08,09 & 10

ekuruvi-aiya8-X3

eelamஈழம் சாவடி

ஒன்டேரியோவின் பிராம்டன் நகரில் வருடாந்தம் நடைபெறும் கரபிறாம் பல்கலாச்சார விழாவில் 4வது தொடர் வருடமாக தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரமாண்டமாய் அமைக்கிறது ஈழம் சாவடி.

பிராம்டன் தமிழ் ஒன்றியத்தின் முன்முயற்சியில் பிராம்டன் நகரில் அதிகம் வசிக்கும் தமிழர்களின் சார்பில் இச்சாவடி அமைகிறது. கலாச்சாரங்களின் சங்கமாக அமையும் இம்மூன்றுநாள் விழாவில் அமையும் 11 கலாச்சார சாவடிகளில் ஒன்றாக ஈழம் சாவடியும் அமைவது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாக பிராம்டன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு மக்கள் பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.

35வது ஆண்டாக அமையும் கரபிறாம் பல்கலாச்சார விழாவில் ஈழம் சாவடி யூலை; வெள்ளி 8ம் நாள் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையும், சனி 9ம் நாள் மதியம் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையும், ஞாயிறு 10ம் நாள் மதியம் 12 மணி முதல் மாலை 9 மணி வரையும் மக்கள் வருகைக்காக திறந்திருக்கும் என்று அறியத்தரப்பட்டுள்ளது.

உணவுச்சாவடிகள், மலிவு விலை வர்த்தகச்சாவடிகள், தமிழர் பாரம்பரிய கண்காட்சி, தமிழர் கலைநிகழ்வுகள் என ஈழம் சாவடி ஒவ்வொரு நாளும் அனைத்து மக்களுக்கும் பெருவிருந்தாக இவ்வாண்டும் அமையவுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Share This Post

Post Comment