பிரபல கார் பந்தய வீரர் மனைவியுடன் கார் விபத்தில் மரணம்

aswin_car_accidentசென்னையைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் (31). அவரது மனைவி நிவேதா (28). இன்று அதிகாலை சென்னை பட்டினம்பாக்கம் அருகே தனது பி.எம்.டபிள்யூ காரில் மனைவியுடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அஸ்வின் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் தீ பிடித்து எரிய தொடங்கியது.

தீ வேகமாக கார் முழுவதும் பரவத் தொடங்கியது. இவ்விபத்து குறித்த தகவலின் பேரில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் ஆகிய தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ அணைக்கப்பட்ட பின்னரே அஸ்வினும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலேயே இறந்திருப்பது தெரிய வந்தது. அஸ்வின் 2003ல் இருந்து 2013ம் ஆண்டு வரை பல்வேறு கார் பந்தய போட்டிகளில் சாதனை புரிந்துள்ளார்.

சமீபத்தில் நடந்த பார்முலா கார்பந்தய போட்டியில் சாம்பியன்ஷிப் பெற்றுள்ளார். அவரின் இறப்பு இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் தரப்பினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Post

Post Comment