150 நாட்களில் 95,000க்கும் அதிகமான யுனிட்களை விற்பனை செய்த மாருதி சுசுகி

ekuruvi-aiya8-X3

Units-Of-Maruti-Suzuki-Dzire-Sold-In-Less-Thanமாருதி சுசுகி நிறுவனம் கடந்த மே மாதம் அறிமுகம் செய்த புதிய தலைமுறை டிசையர் கார் 150 நாட்களுக்குள் 95,000க்கும் அதிகமான யுனிட்கள் விற்பனை செய்துள்ளது.

மாருதி சுசுகி டிசையர் இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை டிசையர் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கார் வெளியாகி ஐந்து மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இதுவரை மட்டும் சுமார் 95,000க்கும் அதிகமான யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய டிசையர் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அறிமுகமான மாதத்தில் இருந்து இதுவரை புதிய டிசையர் விற்பனை மும்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 60,000க்கும் அதிகமான யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், டிசையர் முன்பதிவு செய்வோர் மூன்று மாதங்களுக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய தலைமுறை மாருதி சுசுகி டிசையர் அந்நிறுவனத்தின் HEARTEC வடிவமைப்பை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் முந்தைய மாடல்களை விட மெல்லிய மற்றும் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது. புதிய வடிவமைப்பு காரணமாக காரின் எடை முந்தைய மாடலை விட 105 கிலோ வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதால் புதிய முன்புறம் பெற்றிருக்கிறது. க்ரோம் சரவுண்டு செய்யப்பட்ட புதிய கிரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டேடைம் ரன்னிங் லைட், புதிய பம்ப்பர் உள்ளிட்டவை காரின் தோற்றத்தை ஒட்டுமொத்தமாக வித்தியசமாக வெளிப்படுத்துகிறது.

உள்புற அம்சங்களை பொருத்த வரை டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, மிரர்லின்க் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை டூயல் ஏர்பேக்ஸ், EBD கொண்ட ABS (ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்), பிரேக் அசிஸ்ட் மற்றும் ISOFIX உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

புதிய சுசுகி டிசையர் 1.2 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின், 1.3-லிட்டர் DDiS டீசல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் மோட்டார் 82 bhp மற்றும் 113 Nm செயல்திறனும், டீசல் மோட்டார் 74 bhp மற்றும் 190 Nm செயல்திறன் கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதியை விரும்பும் வாட்க்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

Share This Post

Post Comment