கனேடிய பல்கலைக்கழகங்களின் சர்வதேச மாணவர் தொகையில் பாரிய அதிகரிப்பு

ekuruvi-aiya8-X3

கனடாவின் தரமான பல்கலைக்கழகக் கல்வி, பட்டம் பெற்ற பின் கனடாவில் வாழ, தொழில் புரிய வழங்கப்படும் சந்தர்ப்பஙள் ஆகிய காரணங்களினால், உயர்கல்விக்காக கனடாவை நோக்கி வரும் சர்வதேச மாணவர்களின் என்ணிக்கை பாரிய அளவில் உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அல்பேட்டா மாகாணத்தில் 2011-2012 ஆம் கல்வி ஆண்டில் 13,145 ஆகக் காணப்பட்ட சர்வதேச மாணவர் எண்ணிக்கை, 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் 40 % இனால் அதிகரித்து 18,203 ஆகக் காணப்பட்டது.

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவர்களுக்கு துரித உட்புகுதல் முறை (Express Entry system ) மூலம் கனடாவில் நிரந்தர வதிவிட அந்தஸ்து வழங்கும் குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலத்தின் நோக்கத்திற்கு, இந்தத் தரவுகள் ஆதரவளிப்பதாக உள்ளன.

மனிட்டோபா மாகாணத்தில் 2011-2012 ஆம் கல்வி ஆண்டில் 4,700 ஆகக் காணப்பட்ட சர்வதேச மாணவர் எண்ணிக்கை, 2015-2016 ஆம் கல்வி ஆண்டில்   இரண்டு மடங்காக அதிகரித்து 9,000 ஆகக் காணப்பட்டது. இதேவேளை சஸ்கச்சுவான் மாகாணத்தின் சர்வதேச மாணவர் எண்ணிக்கை இதே காலப்பகுதியில் 24% ஆல் அதிகரித்துள்ளது.

சர்வதேச மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் உயர் கல்வியை வழங்கும் நாடுகளில், கனடா மட்டுமே கல்வியை நிறைவு செய்தபின் நிரந்தர வதிவிட அந்தஸ்தை வழங்குகிறது.

Share This Post

Post Comment