கறுப்பு ஜூலை நினைவு நாள்: இலங்கை அரசாங்கத்தின் நிலஅபகரிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து கண்டனக் கூட்டம்
Jul 22 2012 08:59:35

 கனடிய தமிழர் பேரவை பல ஆண்டுகளாக கறுப்பு ஜூலை நினைவுதினத்தை கனடா வாழ் தமிழ் மக்களுடன் கூடி அனுசரித்துவருவது யாவரும் அறிந்ததே.

 
இம்முறையும், வருகின்ற ஜூலை 23ம் திகதியன்று திங்கட்கிழமை, ஸ்காபரோ நகரசபை மண்டபத்தில், இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து வரும் நில அபகரிப்பு நடவடிக்கைகளை விபரித்து கண்டனக் கூட்டமும் பொதுமக்களுடன் கலந்துரையாடலும் நடாத்த ஏற்பாடாகியுள்ளது.
 
மாலை 6:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இக்கண்டனக் கூட்டத்தில் இலங்கை அமைதி மற்றும் நீதிப் பிரச்சார ஸ்தாபனத்தின் ஆரம்பகால உறுப்பினரும் முன்னாள் ஆலோசகரும், புதிய ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினருமான திரு. கிரேய்க் ஸ்காட், வின்ட்ஸர் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி சேரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கனடா கிளைத் தலைவர் திரு. நக்கீரன் தங்கவேலு ஆகியோர் உரையாற்றவுள்ளனர். உரையாற்றல்களைத் தொடர்ந்து பொதுமக்களுடனான கலந்துரையாடலும் நடைபெறும்.
 
தமிழ் இன அழிப்பின் ஒரு முக்கிய நாளான கறுப்பு ஜூலையை நினைவுகொள்ளவும் எமது இக்கால இடர்களின் விபரங்களை அறிந்துகொள்ளவும் ஒரு சந்தர்ப்பமாக இக் கூட்டம் அமையவுள்ளது.
 
கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் இக் கண்டனக் கூட்டத்திற்கு திரண்டு வருமாறு கனடிய தமிழர் பேரவை கேட்டுக்கொள்கின்றது
 
 
Jun 19 2013 10:04:52 [Canada]
கால்சியம் குறைபாட்டினால் எலும்புகள் வலுவிழக்கும் நோயான ஆஸ்டியோபோரோசிஸ் மருந்துகளை பயன்படுத்தி பெண்களின் மார்பகப் புற்றுநோய் உருவாக்கும் செல்களின் வளர்ச்சியை

Read More >

Jun 19 2013 00:30:50 [Canada]
தற்போது அமெரிக்காவில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்களைக் களைய கல்வி முறையை மேம்படுத்துவது ஒன்றே சரியான வழி என்று தன்னுடைய கருத்தைத் ஆணித்தனமாகத் தெரிவித்துள்ளார் மிஸ்

Read More >

Jun 18 2013 23:54:08 [Canada]
சமீப காலமாகவே அதிகரித்து வரும் தீவிரவாதங்களை இஸ்லாமிய மதத்துடன் பலர் ஒப்பிட்டுப் பேசி வருவது தங்களுக்கு மன வருத்தத்தையும் . மத நம்பிக்கையையும் இழிவு படுத்துவது போன்று உள்ளதால் இது

Read More >

Jun 18 2013 23:51:59 [Canada]
எதிர்வரும் கோடைக்காலத்தின் போது ஒன்ரோறியோவில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரவிருப்பதைத் தொடர்ந்து லிபரல் ஆட்சியின் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்தி வாக்கினைப் பெரும் நோக்கில்

Read More >

Jun 18 2013 10:39:09 [Canada]
கணக்கிலடங்காத ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுககளுக்காக மொன்றியல் மாநகர முதல்வர் மைக்கேல் அப்ப்லெபௌம் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பதவிக்கு வந்த சில

Read More >

Jun 18 2013 10:32:54 [Canada]
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இன்றைய நவீன கால கட்டத்தில் மிதிவண்டி ஓட்டுபவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், ஆபத்துக்களையும் விளக்கும் விதத்திலும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலை காப்பாற்றுவதில் மிதிவண்டிகள் வகிக்கும்

Read More >

Jun 17 2013 09:25:33 [Canada]
வடக்கு யோர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று காலை துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. அதிகாலை 3

Read More >

Jun 16 2013 10:24:39 [Canada]
பிரோம்ட்டனுக்கு வடக்கே போகல் சாலையில் நேற்று காரொன்று பார ஊர்தியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. இதில் Ford F-350 காரில் பயணம் செய்த கோபிநாதன் தங்கவேலு, 40 சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

Read More >