கனடியத் தமிழர் பேரவையின் 8வது ஆண்டு நிதிசேர் நடை

Facebook Cover V02

கனடியத் தமிழர் பேரவையின் 8வது ஆண்டு நிதிசேர் நடை செப்டெம்பர் 11ந்திகதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது. ஸ்காபரோ தொம்சன் மெமோரியல் பார்க்கில் (Thomson Memorial Park) நிகழ்வு காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும். இவ்வாண்டுக்கான நிதிசேர் நடை ‘கனடா மட்டக்களப்பு நட்புப் பண்ணை’ என அழைக்கப்படவிருக்கும் நல்லின மாடுகள் வளர்க்கும் பண்ணை ஒன்றை, மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தில் உருவாக்க நடத்தப்படுகிறது. முன்னாள் போராளிகள், போரினால் அங்கங்களை இழந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், கணவரை இழந்த பெண்கள் என ஏராளமானோருக்கு ‘கனடா மட்டக்களப்பு நட்புப் பண்ணை’த் திட்டத்தினால் பலன் பெறுவதற்கு ஏற்றவகையில் பண்ணை நடத்தப்படும். இந்த நிதிசேர் நடையில் கலந்து கொள்ளவும், கனடா மட்டக்களப்பு நட்புப் பண்ணை குறித்த விபரங்களைத் தரவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கனடா வந்துள்ளார்.

புலம்பெயர் சமூகத்தின் உதவிகள் சீரிய திட்டமிடலுடன் ஒருமுகப்படுத்தப்பட்டுச் செய்யப்படும்போது பலன்கள் பெரிதாக இருக்கும். அவ்வகையில் கனடா தமிழர் பேரவையின் ‘கனடா மட்டக்களப்பு நட்புப் பண்ணை’ தொலைநோக்குடன் நீண்ட கால பலன்தரும் வகையில் அமைகிறது. இத்திட்டத்தின் வழி நமது வறிய மக்கள் பலன்பெறும்போது அவர்கள் நிரந்தரமாகவும் தொடர்ச்சியாகவும் அப்பிரதேசங்களில் வாழக்கூடிய சந்தர்ப்பம் உருவாகிறது. இவ்வாறாக அவர்கள் அப்பிரதேசங்களில் குறிப்பாக எல்லைப் பிரதேசங்களில் வாழ்வார்களேயானால் எம் நிலங்கள் பறிபோகும் அவலம் நேராது. இதன்மூலம் எமது நிலங்களை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். அனைவரையும் இந்த நிதிசேர் நடையில் கலந்து கொள்ளுமாறு கனடியத் தமி்ழர் பேரவை அன்புடன் அழைக்கிறது

Share This Post

Post Comment