ஓர்லன்டோவில் கொல்லப்பட்டவர்களுக்கு ஒன்ராறியோவில் அஞ்சலி

ekuruvi-aiya8-X3

Ontario_Anjaliஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் ஓர்லன்டோவில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்களின் விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று கனடாவின் ஒன்ராறியோவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த அஞ்சலி நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) ஒன்ராறியோவின் தேவாலய வீதியில் அமைந்துள்ள பார்பரா மண்டப பூங்காவில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தனர். இதன்போது அங்கு அவர்களின் பேரணியொன்றும் இடம்பெற்றது.

குறித்த பேரணியில், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என சுமார் 1600 க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது அவர்கள் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு எதிராக தமது கண்டனத்தையும் வெளிப்படுத்தினர்.

நேற்று முன்தினம் இரவு ஓர்லன்டோவில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்களின் விடுதிக்குள் புகுந்த துப்பாக்கிதாரி ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், பலரை பணயக் கைதிகளாகவும் பிடித்திருந்தனர். பின்னர் பல மணிநேர முயற்சியைத் தொடர்ந்து துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

குறித்த சம்பவத்தில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 53 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

– See more at: http://athavancanada.com/?p=246226#sthash.WX5PtpYL.dpuf

Share This Post

Post Comment