தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கரைக்கு கொண்டுவரப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்

ekuruvi-aiya8-X3

neer_kapalகனேடிய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. HMCS Windsor எனப்படும் குறித்த அந்த நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட; தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே முற்பாதுகாப்பு நடவடிக்கையாக கரைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய கிழக்கு கடல் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அந்த கப்பலின் இயந்திரம் ஒன்றில் பழுது ஏற்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கோளாறு ஏற்பட்டதை அடுத்து, கரைக்கு கொண்டுவந்து முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதை அடுத்து அது ஹலிஃபக்சிற்கு திரும்பியதாகவும தெரிவிக்கப்படுகிறது. அந்த நீர்மூழ்கிக் கப்பல் கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக 200 நாட்கள் கடலினுள் இருந்ததாக கடற்படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறே இந்த ஆண்டும் அது கடுமையான பணிகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

1990களின் பிற்பகுதியி்ல், பிரத்தானியாவிடம் இருந்து கனடா கொள்வனவு செய்த நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த HMCS Windsor என்பது ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களும்  பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This Post

Post Comment