பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடகிழக்கு பிராந்தியங்களில் வெள்ளம்

ekuruvi-aiya8-X3

vellam_Britishபிரிட்டிஷ் கொலம்பியாவின் வடகிழக்கு பிராந்தியங்களில் பெய்த கனதமழையினால் அங்கு வெள்ளநிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பல குடியிருப்புக்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதுடன், பெரும்பாலன பகுதிகளில் இருந்த பாலங்கள், மதகுகளுடன் கூடிய வீதிகள் பலவும் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

பிறின்ஸ் ஜோர்ஜ் இல் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் வடகிழக்கே அமைந்துள்ள நகரின் வீதிகள் பாலங்கள் என்பன  வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதனை, வான் மார்க்மாக; எடுக்கப்பட்ட படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அதேவேளை தற்போது வெள்ளப்பெருக்கு நிலைமையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்த பிராந்தியத்திற்கான நகரபிதா, அது இன்னமும் நிச்சயமற்ற நிலையிலேயே உள்ளதாக கூறியுள்ளார்.

தற்போது வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளதாகவும், எனினும் வீடுகளை விட்டு வெளியேறி காடுகளில் தஞ்சமடைந்த மக்கள் இன்னமும் அங்கிருந்து வெளியேறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெள்ளம் தொடர்ந்து வடிந்து செல்லுமானால், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஓரளவு ஆறுதல் ஏற்படும் என்ற போதிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுககு போக்குவரத்து மேற்கொள்வதில் சிரமங்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அந்த மாநிலத்திற்கு விடுத்திருந்த மழைப்பொழிவு எச்சரிக்கையை கனடா சுற்றுக் சூழல் திணைக்களம் மீட்டுக்கொண்டுள்ளது.

Share This Post

Post Comment