பிராம்ப்டன் பகுதியில் சடலங்கள் கண்டெடுப்பு

Facebook Cover V02

promption_Ambuஒன்ராறியோ மாநிலத்தின் பிராம்ப்டன் பகுதி குடியிருப்பொன்றிலிருந்து இருவரது சடலங்கள் நேற்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியிலிருந்து கிடைத்த தகவலொன்றிற்கு அமைய அப்பகுதியை பொலிஸார் ஆய்வு செய்த போதே குறித்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் படையினர் ஈடுபடுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அவர்களின் உயிரிழப்புகளுக்கான காரணம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களையும் பொலிஸார் வெளியிடவில்லை.

மேலும், இதுவொரு தனிப்பட்ட சம்பவம் எனத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி, இதனால் பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment