149 ஆவது கனேடிய தேசிய தினம் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு

149_canada_day30முன்னாள் மூன்று பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்து பிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடினை பரதிநிதித்துவப்படுத்தும் ‘பிரித்தானிய வட அமெரிக்க சட்டம்’ 1867 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி கொண்டுவரப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஆண்டுதோறும் ஜூலை 1 ஆம் ஆம் திகதி கனேடிய நாளாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் 149 ஆவது ஆண்டு கனேடிய தேசிய தினம் நாளை நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பொழுதுபோக்கு அம்சங்களுடனான விசேட நிகழ்வுகள் எதிர்வரும் இரு தினங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதன்முறையாக ஸ்காபுரோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வுகள் நாளை மற்றும் நாளை மறுதினம் என இரு தினங்களுக்கு நடைபெறவுள்ளது. இதன்போது, 100 புதிய கனேடியர்களை வரவேற்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்த ரொறன்ரோ மேயர் ஜோன் ரோறி, ‘தொம்சன் நினைவுப் பூங்காக்களில் குடும்ப நிகழ்வுகள், நீண்டகால கனடா தின அணிவகுப்பு, பல்வேறு சமூக கூட்டங்கள், கலாச்சார கொண்டாட்டங்கள், உணவு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும்’ என்று தெரிவித்தார்.

அதேவேளை கனேடிய தின கொண்டாட்டங்களில் சமுதாய நலன்கள் மீதும் அக்கறை செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஸ்காபுரோ பல்வேறு கலாச்சாரங்களுக்கு தாயகமாக விளங்குகிறது. இந்த நிகழ்வு கனடாவின் மீதுள்ள அன்பை மாத்திரம் கொண்டாடுவது அல்ல. அனைத்து கலாச்சாரங்களை கொண்டாடுவது என்று நகரசபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

civic மையம், ஸ்கார்பரோ டவுன் மையம், ரொறன்ரோ 100 ஆவது நூலகம் மற்றும் ஆல்பர்ட் காம்ப்பெல் சதுக்கம் ஆகியவை விரைவில் புத்துயிர் திட்டங்களில் உள்ளன.

இதனால் இந்த ஆண்டு ஸ்காபுரோவில் சிறப்பாக கொண்டாடப்படும் கனேடிய தினம் அடுத்த வருடம் இன்னும் சிறப்பானதாக இருக்கும் என கனேடிய மக்கள் தெரிவிக்கின்றனர்.

Share This Post

Post Comment