பிலிப்பைன்ஸில் கடத்தப்பட்ட மற்றொரு கனடியரும் படுகொலை

sdsd

phili_canadiarபிலிப்பைன்ஸில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கடத்தப்பட்ட, கல்கரியை சேர்ந்த றொபேரட் ஹால், இன்று (திங்கட்கிழமை) படுகொலை செய்யப்பட்டுள்ளதை பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பிலிப்பைனஸ்சில் மின்டனாவோ தீவில் விடுமுறைக்காக சென்றிருந்த போது இரண்டு கனேடியர்கள் (ஜோன் றிட்ஸ்டெல், றொபேரட் ஹால்) ஒரு நோர்வே நாட்டைச் சேர்ந்தவரையும், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரையும் ஜ.எஸ் திவிரவாத அமைப்பின் துணை அமைப்பான அபு சயீவ் என்ற தீவிரவாத குழு கடத்திச்சென்றனர்.

இதையடுத்து, இவர்களை விடுதலை செய்யவேண்டுமாயின், கிட்டத்தட்ட 8 மில்லியன் டொலர்கள் கப்பம் கோரி தீவிரவாத குழு காலக்கெடு விதித்திருந்தது. இந்த தொகையை கனடா கொடுக்க மறுத்ததால் ஜோன் றிட்ஸ்டெல் கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி திவிரவாதிகளால் தலைதுண்டித்து படுகொலைசெய்யப்பட்டார்.

இதையடுத்து, தீவிரவாதிகளிடம் உள்ள மற்றைய கனேடிய பணயக்கைதியான றொபேரட் ஹாலை விடுதலை செய்ய வேண்டுமாயின் கனடா, தீவிரவாத குழுவினருடன் பேரம் பேசவேண்டுமெனவும், இதற்காக இன்று வரை தீவிரவாதிகளால் காலக்கெடுவும் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், இதனை கனேடிய பிரதமர் ஜெஸ்டின் ரூடோ கொடுக்க மறுத்தார். ஆகையால் அவர்கள் வசமிருந்த மற்றைய பணயக்கைதியான றொபேரட் ஹாலை, 25வருடங்களாக வன்முறையில் ஈடுப்பட்டுவரும் யோலோ தீவை அடிப்படையாக கொண்ட அபு சயீவ் என்ற தீவிரவாத குழுவினர், இன்று படுகொலை செய்துள்ளனர்.

Share This Post

Post Comment