நெடுஞ்சாலை 427 மீண்டும் திறக்கப்பட்டது

ekuruvi-aiya8-X3

427_7வாகனமொன்று தீப்பிடித்தமையினால் மூடப்பட்டிருந்த மிஸ்ஸிசாகா பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 427 இல் மூன்று தடங்கள் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கிய முதலாவது தடம் இன்னமும் மூடப்பட்டுள்ளதாகவும், அதுவும் விரைவில் திறக்கப்படும் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்திருந்தனர்.

நெடுஞ்சாலை 427 இல் ரெக்ஸ்டஸ் பௌலவோட் பகுதியில் பராவூர்தி ஒன்று தீ பற்றிக்கொண்டமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது. பின்னர் அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். எனினும் குறித்த சம்பவத்தில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் பொலிஸார் எந்த தகவலையும் வெளியிடவில்லை

Share This Post

Post Comment