12ஆம் வகுப்பு வரை நாள் தவறாமல் பாடசாலை சென்ற மாணவி

ekuruvi-aiya8-X3

student_school13 வருடங்களை முடிப்பது ஒரு வகை ஓட்டப் பந்தயமாகும். ஆனால் சஸ்கற்சுவானை சேர்ந்த உயர்தர பாடசாலை பட்டதாரியான மாணவி ஒருத்தி இந்த ஓட்டத்தின் இறுதி கோட்டை அபூர்வமான ஓரு விருதாக தாண்டியுள்ளார். Violet Starr என்ற  இந்த மாணவி kindergarten முதல் 12ம் வகுப்பு வரை ஒரு நாளேனும தவறாது சென்று உத்தமமான வரவிற்கான விருதுடன் உயர் பட்டம்  பெற்றுள்ளார்.

றிஜைனாவிற்கு அருகில்  Piapot  முதல் தேசத்தை சேர்ந்த Payepot School  மாணவி இவராவார். முதல் தடவையாக இந்த சாதனைக்கான விருதினை பெறும் மாணவி என்ற பெருமையையும் பெறுகின்றார். இதற்கான பெருமை தனது தந்தையையே சாரும் என இந்த மாணவி தெரிவித்தார்.

தனியொரு பெற்றாராக இருந்து தன்னையும் தனது மூன்று மூத்த உடன்பிறப்புக்களையும் வளர்த்தவர் தந்தை என கூறினாள். பெருமையுடைய தந்தையாக மகளின் பட்டமளிப்பு  நிகழ்விற்கு தந்தைKaisowatum -ம் சென்றிருந்தார். அவளின் கடுமையான உழைப்பிற்கு அவள் பெற்ற பல விருதுகளைக் கண்டார். கழுகு இறகு கவர்னர் ஜெனரல் விருது மற்றும்   honour roll  லில் ஒரு இடத்தையும் பெற்றாள். இவை மட்டுமன்றி இரண்டு நட்சத்திர போர்வைகளை முறையே கவுன்சில் தலைவரிடமிருந்தும், கடந்த 13வருடங்களாக தினமும் இவளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற பேருந்து சாரதியிடமிருந்தும் பெற்றாள்.

பாடசாலை வரவு கல்வி வெற்றிக்கு ஒரு உப்பரிகை மேல் புள்ளியாக அமையும் என பாடசாலை அதிபர் மார்லிஸ் மொன்ட்கொமெறி தனது அறிக்கையில் தெரிவித்தார். Starr  றிஜைனா பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை எதிர் வரும் இலையுதிர் காலத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளாள்.வர்த்தகம் கலை ஆகிய துறைகளை கற்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளாள்.

இந்த மாணவியை பாராட்டி அவர் மென்மேலும் வளர வாழ்த்துவோம்.

Share This Post

Post Comment