பொருளாதார நிலையில் முன்னணி நாடாக பிரகாசிக்கிறது கனடா; விரைவில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்கும்
Jul 20 2012 08:37:38
ஐரோப்பிய நாடுகளுடன் கனடாவை ஒப்பிட முடியாது. தற்போதைய சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் முதன்மையான நாடாக ஜொலிக்கிறது கனடா என சிறப்புச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது பிரான்சிலிருந்து வெளியாகும் பிரெஞ்சு வார இதழ்களில் ஒன்றான L’Express. அதுமட்டுமன்றி பிரான்சில் வாழும் மக்களுக்கு கியூபெக் மட்டுமல்ல கனடாவின் எந்தப் பகுதிக்கு குடிபெயர்ந்தாலும் வளமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை ஊக்குவிக்கும் வகையிலும் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் கனடா சிறந்து விளங்குவதாக பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும் கூறி வருகிறார். மேலும் பிற ஐரோப்பிய நாடுகளான கிரீஸ், பிரித்தானியா ஆகியவற்றில் வாழும் மக்களும் இதே எண்ணத்தையே கொண்டுள்ளனர். மேற்கத்திய நாடுகளில் திடமான பொருளாதார நிலையைக் கொண்டுள்ள குறிப்பிடத்தக்க சில நாடுகளில் கனடாவும் ஒன்று என்பதும் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கக் கூடிய வகையில் கனடாவின் பொருளாதாரம் தற்போது உள்ளதாகவும் பல வல்லுனர்கள் கூறியுள்ளதையும் அதற்கான காரணங்களையும் தெளிவாகக் கூறியுள்ளது இந்த வார இதழ்.
ஆசியா உட்பட அனைத்து உலக நாடுகளும் கனடாவின் இயற்கை வளங்களில் உருவாக்கப்படும் பொருட்களை வாங்குவதில் அக்கறை செலுத்தி வருவதையும் , இதே நிலை சில ஆண்டுகளுக்கு நீடித்தால் கனடா உலக அரங்கில் மிக முக்கிய சக்தியாக உருவெடுத்து விடும் எனவும் L’Express வார இதழின் சிறப்புக் கட்டுரையில் புகழாரமும் சூட்டப்பட்டுள்ளது.
Jun 19 2013 00:30:50 [Canada]
தற்போது அமெரிக்காவில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்களைக் களைய கல்வி முறையை மேம்படுத்துவது ஒன்றே சரியான வழி என்று தன்னுடைய கருத்தைத் ஆணித்தனமாகத் தெரிவித்துள்ளார் மிஸ்
Read More >
Jun 18 2013 23:54:08 [Canada]
சமீப காலமாகவே அதிகரித்து வரும் தீவிரவாதங்களை இஸ்லாமிய மதத்துடன் பலர் ஒப்பிட்டுப் பேசி வருவது தங்களுக்கு மன வருத்தத்தையும் . மத நம்பிக்கையையும் இழிவு படுத்துவது போன்று உள்ளதால் இது
Read More >
Jun 18 2013 23:51:59 [Canada]
எதிர்வரும் கோடைக்காலத்தின் போது ஒன்ரோறியோவில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரவிருப்பதைத் தொடர்ந்து லிபரல் ஆட்சியின் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்தி வாக்கினைப் பெரும் நோக்கில்
Read More >
Jun 18 2013 10:39:09 [Canada]
கணக்கிலடங்காத ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுககளுக்காக மொன்றியல் மாநகர முதல்வர் மைக்கேல் அப்ப்லெபௌம் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பதவிக்கு வந்த சில
Read More >
Jun 18 2013 10:32:54 [Canada]
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இன்றைய நவீன கால கட்டத்தில் மிதிவண்டி ஓட்டுபவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், ஆபத்துக்களையும் விளக்கும் விதத்திலும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலை காப்பாற்றுவதில் மிதிவண்டிகள் வகிக்கும்
Read More >
Jun 17 2013 09:25:33 [Canada]
வடக்கு யோர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று காலை துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. அதிகாலை 3
Read More >
Jun 16 2013 10:24:39 [Canada]
பிரோம்ட்டனுக்கு வடக்கே போகல் சாலையில் நேற்று காரொன்று பார ஊர்தியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. இதில் Ford F-350 காரில் பயணம் செய்த கோபிநாதன் தங்கவேலு, 40 சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
Read More >
Jun 16 2013 10:21:44 [Canada]
சிரியா தொடர்பான விவகாரங்களில் ஜி-8 நாடுகள் கடும் சவால்களைச் சந்தித்து வருவதால் இது தொடர்பில் முடிவெடுக்கு வகையில் ஜி-8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இரண்டு நாள் மாநாடு ஒன்று வடக்கு அயர்லாந்தில்
Read More >