மூன்று கமராக்கள் கொண்ட மோட்டோ ஜி5 எஸ் பிளஸ்!

Facebook Cover V02

samsung-galaxy-note-7-widgets-2மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கிய இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கமரா, 3 ஜிபி ரேம் மொபைலில் 32 ஜிபி மெமரியும்; 4 ஜிபி ரேம் கொண்ட மொபைலில் 64 ஜிபி இன்பில்ட் மெமரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

128 ஜிபி திறன் கொண்ட மெமரி கார்டையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். 3 ஜிபி ரேம், 4 ஜிபி ரேம் என இரு வகைகளில் இந்த மொபைல் அறிமுகமாகிறது.

5.5 இன்ச் 1080 தொடுதிரை கொண்ட இந்த மொபைலில், 13 மெகாபிக்சல் கொண்ட இரண்டு லென்ஸ் ரியர் கேமராக்கள், 8 மெகா பிக்ஸல் முன் பக்க ஃப்ளாஷ் கொண்ட கமரா, முன் பக்க கைரேகை ஸ்கேனர், ஆன்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளம், அக்டோ – கோர் (Octa-core) குவால்காம், ஸ்னாப் 620 செயலி, 3000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளன. நாளை இந்த மொபைல் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இன்னும் விலை அறிவிக்கப்படவில்லை.

Share This Post

Post Comment