காதலர் தினத்தை முன்னிட்டு பெங்களூர் ரோஜாவுக்கு கிராக்கி

ekuruvi-aiya8-X3

bl-roseபொள்ளாச்சி மார்க்கெட்டில் நேற்று (பிப்ரவரி, 12) , காதலர் தினத்தையொட்டி பெங்களூர் ரோஜவுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. இதில், 20 எண்ணம் கொண்ட ஒருகட்டு 300வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி தேர்நிலை பூ மார்க்கெட்டுக்கு ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், பழனி, நிலக்கோட்டை மற்றும் உள்ளூர் பகுதியிலிருந்து தினமும் கொண்டு வரப்படும் மல்லிகை, செவ்வந்தி, முல்லை, செண்டுமல்லி, சில்லிரோஸ் உள்ளிட்ட பூ வகைகள், மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒசூர், பெங்களூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் ரோஜாக்களுக்கு அதிக கிராக்கி உள்ளது.

தற்போது, ஊட்டியிலிருந்து ரோஜா வரத்து குறைந்தாலும், ஓசூர், பெங்களூர் ரோஜா வரத்து அதிகரிப்பால் அதன் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ரோஜா வரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில், நாளை காதலர் தினம் என்பதால், ஒசூர் மற்றும் பெங்களூரில் இருந்து ரோஸ், சிவப்பு, மஞ்சள், வெள்ளை உள்ளிட்ட பல கலரில் விற்பனைக்கு வந்திருந்தது.

மேலும், ரோஜாவுக்கு அதிக கிராக்கியால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் ஒருகட்டு ரோஜா ரூ.150 முதல் அதிகபட்சமாக ரூ.200 வரை விற்பனையானது. ஆனால் நேற்று, 20 எண்ணிக்கை கொண்ட ஒருகட்டு ரோஜா விலை ரூ.260 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது. ஊட்டியிலிருந்து இருந்து ரோஜா பூ வரத்து குறைவாக இருந்ததால், பெங்களூர் மற்றும் ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ரோஜா விற்பனை விறுவிறுப்புடன் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Share This Post

Post Comment