எல்ஐசியின் புதிய பீமா டைமண்ட் பாலிசி அறிமுகம்

ekuruvi-aiya8-X3

LICமதுரை ஐஎம்ஏ அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற எல்ஐசி மதுரைக் கோட்ட மேலாளர் மன்ற முகவர் பேரவைக் கூட்டத்தில் புதிய பாலிசி அறிமுகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு முதுநிலைக் கோட்ட மேலாளர் பி.ஜே.நிக்கல்சன் தலைமை வகித்தார். வணிக மேலாளர் கு.கருப்பசாமி, விற்பனை மேலாளர் வி.எஸ். அனந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய பாசிலியின் சிறப்பு அம்சங்கள் குறித்து முதுநிலை கோட்ட மேலாளர் நிக்கல்சன் கூறியது:

எல்ஐசியின் வைர விழா ஆண்டையொட்டி இந்த பாலிசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதிர்வுப் பயன்தொகை, கூடுதல் ஆயுள் பாதுகாப்பு, விசுவாசப் பங்களிப்பு, வாழ்வுகாலப் பயன், முதிர்வுக்குப் பிறகும் ஆயுள் பாதுகாப்பு நீட்சி, விபத்து பாதுகாப்பு ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது.

பாலிசி காலத்தில் குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதுமானது. அதாவது 16,20,24 ஆண்டுகளுக்கான பாலிசிகளுக்கு, பாலிசிதாரர்கள் முறையே 10, 12, 15 ஆண்டுகள் பிரீமியம் செலுத்தினால் போதுமானது. பாலிசிகாலத்தில் முழுக் காப்புத் தொகைக்கான ஆயுள் பாதுகாப்பு, பாலிசி முதிர்வுக்குப் பிறகு நீட்சிக்காலத்தில் காப்புத் தொகையின் பாதி அளவுக்கு ஆயுள் பாதுகாப்பு வழங்கப்படும்.

ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை, காப்புத் தொகையின் குறிப்பிட்ட சதவீதம் வாழ்வுகாலப் பயனாக வழங்கப்படும். பாலிசி முதிர்வில் வாழ்வுகாலப் பயன்தொகை போக மீதமுள்ள தொகையுடன் விசுவாசப் பங்களிப்பு தொகை வழங்கப்படும். விபத்துக் காப்பீடு, விபத்தினால் திறன் இழப்புக்கு பெறும் பயன் போன்றவை இத் திட்டத்தின் சிறப்பு அம்சங்களாகும். 14 வயது முடிந்தோர் பாலிசியின் பயனைப் பெறலாம்.

இப்போதுள்ள இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும், அனைத்துத் தரப்பினரின் ஆயுள் பாதுகாப்பு மற்றும் நிதித் திட்டமிடலைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த பாலிசி அமைந்துள்ளது என்றார்.

Share This Post

Post Comment