பஜாஜ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்கள்

bajaji_Avenger-Meterஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் போக்குவரத்துக்கான எதிர்காலமாக பார்க்கப்படுகிறது. இதனை புரிந்து கொண்ட வால்வோ மற்றும் போர்ஷ் போன்ற நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் தங்களின் திட்டங்களை அறிவித்துள்ளன. வரும் ஆண்டுகளில் இவை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பஜாஜ் ஆட்டோ எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் கால்பதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இந்திய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை 2020-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. சமீபத்திய பேட்டியில் பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராஜிவ் பஜாஜ் இந்த தகவல் தெரிவித்தார்.

மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிப்பதில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் பஜாஜ் நிறுவனம் தனது முதல் மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு ராஜிவ் பஜாஜ் அளித்த பேட்டி ஒன்றில் பஜாஜ் நிறுவனம் அர்பனைட் எனும் பிரான்டு பணிகளில் ஈடுபட்டு இருப்பதாகவும், இந்த பிரான்டு முதல் கட்ட வாகனங்கள் 2020-ம் ஆண்டில் எதிர்பார்க்கலாம் என தெரிவித்திருந்தார்.

ஈரான், பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியா உள்ளிட்ட சந்தைகளில் பஜாஜ் விற்பனை அமோகமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் பஜாஜ் வளர்ச்சி 30% வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கியூட் என அழைக்கப்படும் குவாட்ரிசைக்கிள் வாகனத்தை அறிமுகம் செய்வதற்கான அனுமதிக்காக பஜாஜ் காத்திருக்கிறது.

பஜாஜ் நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் மோட்டார்சைக்கிள் மாடல்களான சிடி, டிஸ்கவர் மற்றும் பல்சர் ரக வாகனங்கள் அதிகளவு விற்பனையை பதிவு செய்து வருகிறது. மேலும் சர்வதேச சந்தையில் ராயல் என்ஃபீல்டு மாடல்களை விட டாமினர் விற்பனை அதிகரித்து இருப்பதாக பஜாஜ் தெரிவித்துள்ளது.

இதே நிலை இந்தியாவில் ஏற்பட சில காலம் ஆகும். இந்தியாவில் தற்சமயம் 3000 முதல் 4000 டாமினர் யூனிட்களை பஜாஜ் விற்பனை செய்து வருகிறது. எனினும் பஜாஜ் நிறுவனம் மாதம் 10,000 யூனிட்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.


Related News

 • டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி
 • இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 11-வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்
 • அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.34 ஆக சரிவு
 • ரூ.5000 கோடி வங்கிக் கடன் மோசடி – குஜராத் தொழிலதிபர் நைஜீரியாவில் பதுங்கல்?
 • புதிய வடிவமைப்பில் சுசுகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
 • டொயோட்டா இன்னோவா புதிய விலை
 • வரலாற்றில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி – டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு மேலும் சரிவு
 • ரூபாய் நோட்டால் தொற்றுநோய்கள் பரவுகிறதா?
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *