லேம்பெரிட்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் வெளிவருகிறது

Lambretta-Electric-Scooterஇத்தாலி நாட்டை சேர்ந்த ஸ்கூட்டர் பிரான்டு லேம்பெரிட்டா தனது 70-வது ஆண்டு விழாவை 2017-ம் ஆண்டில் கொண்டாடியது. இந்த நிகழ்வை முன்னிட்டு அந்நிறுவனம் வி ஸ்பெஷல் மாடல்களை அறிமுகம் செய்திருந்தது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் லேம்பெரிட்டா புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேம்பெரிட்டா நிறுவனம் மூன்று புதிய மாடல்களை ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யலாம் என்றும் இதைத் தொடர்ந்து புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. லேம்பெரிட்டா வி ஸ்பெஷல் ஸ்கூட்டர்கள் வி50, வி125 மற்றும் வி200 என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது.

2019-ம் ஆண்டு வாக்கில் லேம்பெரிட்டா நிறுவனம் 400சிசி ஸ்கூட்டர் ஒன்றை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லேம்பெரிட்டா வி ஸ்பெஷல் மாடல்கள் ஆஸ்திரியாவை சேர்ந்த கிஸ்கா எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதே நிறுவனம் கேடிஎம் மோட்டார்சைக்கிள்களையும் வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.

லேம்பெரிட்டா வி ஸ்பெஷல் மாடலில் அதிநவீன அம்சங்கள் பாரம்பரியமிக்க வடிவமைப்பு சேர்த்து ஸ்கூட்டரின் தோற்றம் மற்றும் பயன்பாட்டை சுவாரஸ்யமாக்குகிறது. இத்துடன் ஸ்டீல் பாடி, ஃபிக்சட் முன்பக்க ஃபென்டர் மற்றும் பிரபல லேம்பெரிட்டா பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது.

லேம்பெரிட்டா வி ஸ்பெஷல் ஸ்கூட்டர்கள் 50சிசி, 125சிசி மற்றும் 200சிசி என மூன்று வித இன்ஜின்களில் கிடைக்கிறது. இத்துடன் GP மற்றும் SX ஸ்கூட்டர்களையும் அறிமுகம் செய்ய லேம்பெரிட்டா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வி ஸ்பெஷல் மாடல்களில் எல்இடி ஹெட்லேம்ப், டெயில் லேம்ப், டர்ன் இன்டிகேட்டர்கள், முன்பக்கம் 220மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக், 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட் மற்றும் டெலிஸ்கோபிக் ஃபோர்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் லேம்பெரிட்டா வி ஸ்பெஷல் எடிஷன்களில் பாதுகாப்பு வசதியை வழங்கும் போஷ் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 1950 முதல் 1990 ஆண்டுகளில் லேம்பெரிட்டா ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்பட்டன. பின் நிதி பற்றாக்குறை காரணமாக சர்வதேச சந்தையில் இருந்து இந்நிறுவனம் தலைமறைவானது.


Related News

 • டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி
 • இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 11-வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்
 • அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.34 ஆக சரிவு
 • ரூ.5000 கோடி வங்கிக் கடன் மோசடி – குஜராத் தொழிலதிபர் நைஜீரியாவில் பதுங்கல்?
 • புதிய வடிவமைப்பில் சுசுகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
 • டொயோட்டா இன்னோவா புதிய விலை
 • வரலாற்றில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி – டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு மேலும் சரிவு
 • ரூபாய் நோட்டால் தொற்றுநோய்கள் பரவுகிறதா?
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *