ஏடிஎம்களில் பாதுகாப்பு – வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு

ekuruvi-aiya8-X3

atm_machineஏடிஎம்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம் வருமாறு:

வங்கிகள் செயல்படுத்தும் அனைத்து ஏடிஎம்களிலும் புதிய ரூபாய் நோட்டுகளான 200 , 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்கும் வகையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதற்கேற்ப ஏடிஎம் இயந்திரங்களை நவீனமயமாக்க வேண்டும். அதேபோல ஏடிஎம்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பலப்படுத்த வேண்டும்.

வங்கிகளின் ஏடிஎம்கள் விண்டோஸ் எக்ஸ்பி அல்லது பிற இயங்குதளம் மூலம் செயல்படுகின்றன. இத்தகைய ஏடிஎம்கள் நவீனமயமாக்கப்பட வேண்டும். இந்த பிரச்சினையை வங்கிகள் மிகவும் மெதுவாக செயல்படுத்தி வருகின்றன. இதனால் ஏடிஎம்கள் நவீனமயமாகுவது காலதாமதமாகிறது. மேலும் காலாவதியான இயங்குதள செயல்பாடுகளைக் கொண்டுள்ள ஏடிஎம்களால் வங்கிகளின் பாதுகாப்புக்குத்தான் அச்சுறுத்தல் என்று சுற்றறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

விரல் ரேகை பாஸ்வேர்டு முறை, யுஎஸ்பி போர்ட் வசதிகள் நீக்கம், தாமாக செயல்படும் நிலையை நீக்குவது, நவீன சாஃப்ட்வேர் பயன்பாடு உள்ளிட்டவற்றை செயல்படுத்துமாறு ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது.

நாடு முழுவதும் 2.06 லட்சம் ஏடிஎம்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.

Share This Post

Post Comment