ஏர் இந்தியா பங்குகளை விற்கும் முடிவு ஒத்திவைப்பு

air-indiaஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் முடிவை மத்திய அரசு ஒத்திவைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற ஆண்டில் தேர்தல்களை சந்திக்க உள்ளதால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் தேவைக்கேற்ப ஏர் இந்தியா செயல்பாடுகளுக்கு முதலீட்டினை மேற்கொள்ளவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் தகவல் அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கடன் சுமை காரணமாக அந்த நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் ஏர் இந்தியா ஏலத்தில் பங்கேற்க எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏல விண்ணப்பத்துக்கான இறுதி நாள் முடிவடைந்த சில நாட்களுக்குள்ளாகவே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவின் தினசரி செயல்பாடுகளுக்கான புதிய முதலீடுகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் புதிய விமானங்கள் வாங்குவதற்கான ஆர்டர்களுக்கும் அளிக்கப்பட உள்ளதாக அரசு அதிகாரிகள் கூறினர்.

நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் நடைபெற்ற உயர் நிலை ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தற்காலிக நிதி அமைச்சர் பியுஷ் கோயல், விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் விமானப் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஏர் இந்தியா நிறுவனம் செயல்பாட்டு லாபத்தில் இயங்கி வருகிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் நிதிநிலைமை மோசமாக உள்ளது. ஆனால் இதிலிருந்து மீள அனைத்து வழிகளிலும் செலவுகளைக் கட்டுப்படுத்துவது, திறமையான செயல்பாடுகளால் இந்த நிலையை மேம்படுத்த முடியும். இதனால் பங்குகளை விலக்கிக் கொள்வதற்கு உடனடியாக அவசரம் காட்ட தேவையில்லை என்றும் அந்த அதிகாரிகள் கூறினர்.

ஏர் இந்தியா பங்குகளை பட்டியலிட கொண்டு செல்லும் முன்பாக, நிறுவனத்தின் செயல்பாடுகளை லாபகரமான நிலைமைக்கு கொண்டுவர முடியும் என மத்திய அரசு நம்புகிறது. அதற்கு முன்பாக சில நிலைமைகளை சரி செய்யவும் திட்டமிட்டுள்ளது. இவற்றை சரி செய்ததும் அடுத்த கட்டமாக பங்குகளை ஐபிஓ கொண்டு வரை முயற்சிகளை மேற்கொள்ளும் என்றனர்.

செபியின் விதிமுறைகள்படி ஒரு நிறுவனம் ஐபிஓ வர, அந்த நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் லாபகரமாக செயல்பட்டிருக்க வேண்டும். இதன்படி ஏர் இந்தியாவின் செயல்பாட்டு லாபம் மேம்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


Related News

 • டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி
 • இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 11-வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்
 • அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.34 ஆக சரிவு
 • ரூ.5000 கோடி வங்கிக் கடன் மோசடி – குஜராத் தொழிலதிபர் நைஜீரியாவில் பதுங்கல்?
 • புதிய வடிவமைப்பில் சுசுகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
 • டொயோட்டா இன்னோவா புதிய விலை
 • வரலாற்றில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி – டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு மேலும் சரிவு
 • ரூபாய் நோட்டால் தொற்றுநோய்கள் பரவுகிறதா?
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *