இ-பே இணையதள செயல்பாடு மூடல்

ekuruvi-aiya8-X3

EBAYஇ-பே இணையதள செயல்பாடுகள் மூடப்படுவதாக அதன் தாய் நிறுவனமான பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. விரைவிலேயே புதிய இணையதளம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் வாங்கியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக இ-பே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொடர்ந்து இ-பே இணையதள சேவையை நீங்கள் பெற முடியாததற்கு வருந்துகிறோம், இந்த வருத்தம் நீண்ட காலத்துக்கானது அல்ல. விரைவிலேயே உங்களது ஷாப்பிங் அனுபவத்தைத் தொடர புதிய இணையதளம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 30-ம் தேதி இறுதி நாள் என்றும், வாடிக்கையாளர்கள் அதுவரை தங்களுக்கு உரிய தொகை குறித்தும், பரிவர்த்தனை குறித்தும் விவரங்களைப் பெற முடியும் என்று இ-பே தெரிவித் துள்ளது.

கடந்த ஜூலை 26-ம் தேதியே வாடிக்கையாளர்கள் ரூ. 250-க்கும் குறைவான பொருள்கள் மற்றும் ரூ. 8 ஆயிரத்துக்கும் அதிக விலையிலான பொருள்களை தாங்கள் விருப்ப பட்டியலில் இருந்து நீக்குமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டது.

புதிய இணையதளம் குறித்த விவரத்தை வெளியிட பிளிப்கார்ட் மறுத்துவிட்டது.

பிளிப்கார்ட் நிறுவனம் 2017-ம் ஆண்டில் இ-பே நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளை 140 கோடி டாலருக்கு வாங்கியது. இந்நிறுவனத்தில் 50 கோடி டாலர் வரை முதலீடு செய்துள்ளது.இந்நிறுவனத்துக்கு பிளிப்கார்ட் நிறுவனத்தில் 20 கோடி டாலர் மதிப்பிலான பங்கு உள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் வாங்கியதைத் தொடர்ந்து, பிளிப் கார்ட் நிறுவனத்தில் தனக்குள்ள பங்குகளை 110 கோடி டாலருக்கு விற்க இபே முன் வந்தது. அத்துடன் இந்தியாவில் இ-பே செயல்பாடுகளை மீண்டும் தொடங்கப் போவதாக அறிவித்தது.

1995-ம் ஆண்டு கலிபோர்னி யாவில் தொடங்கப்பட்ட இ பே நிறுவனம் இந்தியாவில் 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment