பேட்டரி ஆட்டோ – ஓலாவின் தயாரிப்பில் தீவிரம்

ekuruvi-aiya8-X3

olaசெயலி மூலம் வாடகைக் கார் மற்றும் ஆட்டோ சேவையில் ஈடுபட்டு வரும் ஓலா நிறுவனம் பேட்டரியில் இயங்கும் ஆட்டோக்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருந்தவரை இந்நிறுவனம் பேட்டரி ஆட்டோ தயாரிப்பு பிரிவுக்காக அழைத்து வந்துள்ளது. ஆட்டோக்கள் மட்டுமின்றி பேட்டரியில் இயங்கும் கார்களைத் தயாரிப்பதும் இந்நிறுவனத்தின் திட்டமாகும்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேப்பாட்டு பிரிவில் எலெக்ட்ரானிக் துறைக்கு தலைவராக இருந்த நேதாஜி பாட்ரோவை தங்கள் நிறுவனத்தின் பேட்டரி வாகன தயாரிப்பு பிரிவுக்கு பொறுப்பேற்க ஓலா அழைத்து வந்துள்ளது. பாட்ரோ ஏற்கெனவே மாருதி சுஸுகி நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் கட்டமாக ஆட்டோ தயாரிப்பில் ஓலா கவனம் செலுத்தும் என்றே தெரிகிறது. சென்னை, பெங்களூரு நகரங்களில் ஓலா ஆட்டோவுக்கு கிடைத்துள்ள பெருமளவு வரவேற்பைத் தொடர்ந்து பேட்டரி ஆட்டோக்களை இயக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆட்டோக்களை பொறுத்தமட்டில் பஜாஜ் மற்றும் டிவிஎஸ் நிறுவனத் தயாரிப்புகளே முன்னிலை வகிக்கின்றன. மஹிந்திரா மற்றும் பியாஜியோவின் மூன்று சக்கர வாகனங்கள் பெரும்பாலும் சரக்கு போக்குவரத்துக்கே பயன்படுத்தப்படுகின்றன. வேறு சில நிறுவனங்கள் ஆட்டோ தயாரிப்பில் ஈடுபட்டாலும் குறிப்பிட்டுசொல்லும்படி இல்லை. பேட்டரி ஆட்டோ குறித்த ஆய்வில் முன்னணி நிறுவனங்கள் எவையும் ஈடுபடாததால் முதலில் இதில் இறங்க ஓலா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ஓலாவுக்கு போட்டியாக திகழும் உபெர் நிறுவனம் ஏற்கெனவே டிரைவர் தேவைப்படாத கார்களை இயக்கிப் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Share This Post

Post Comment