சென்னை பெண், அமெரிக்க ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ தலைமை நிதி அதிகாரியாக நியமனம்

suryadevaraசென்னையில் பிறந்து, சென்னை பல்கலைக்கழத்தில் படித்த திவ்யா சூர்யதேவரா அமெரிக்காவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ்(ஜிஎம்) நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக(சிஎப்ஓ) நியமிக்கப்பட உள்ளார். அவர் விரைவில் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ப்பரேட் பைனான்ஸ் அமைப்பின் துணைத் தலைவராக இருக்கும் திவ்யா சூர்யதேவரா, செப்டம்பர் 1-ம் தேதி ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகப் பதவி ஏற்பார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது ஜிஎம் நிறுவனத்தின் சிஎப்ஓ அதிகாரியாக சக் ஸ்டீவன்ஸ் இருந்துவருகிறார், இவர் ஓய்வுக்குப்பின் திவ்யா அந்த பதவிக்கு வர உள்ளார்.

திவ்யா சூர்யதேவரா(வயது39), அமெரிக்காவின் மிகப்பெரிய ஆட்டமொபைல் நிறுவனத்தின் மிக முக்கியமான பதவிக்கு வரும் 2-வது பெண் ஆவார். இப்போது, ஜிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மேரி பாரா(வயது56) என்ற பெண் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பிறந்த திவ்யா சூர்யதேவரா தனது இளநிலை மற்றும் முதுநிலை வணிகவியல் பட்டப்படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின்னர் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழக்தில் எம்பிஏ பயில்வதற்காகத் தனது 22-வயதில் அமெரிக்கா சென்றார்.

திவ்யா பட்டயக் கணக்காளராகவும், நிதி ஆய்வாளராகவும் பயிற்சி பெற்றார். அமெரிக்காவில் உள்ள யுபிஎஸ் மற்றும் பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். அதன்பின் கடந்த 2005-ம் ஆண்டு டெட்ராய்ட் நகரைச் சேர்ந்த ஜிம் நிறுவனத்தில் திவ்யா தனது 25-வயதில் பணியில் சேர்ந்தார்.

ஜிஎம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக திவ்யா நியமிக்கப்பட்டது குறித்து தலைமை நிர்வாக அதிகாரி மேரி பாரா கூறுகையில், திவ்யாவின் அனுபவமும், பல்வேறு விஷயங்களில் அவரின் தலைமைப் பண்பும் நிதித்துறையில் மிகச்சிறந்த மாற்றங்களையும், வலிமையான தொழில்வளர்ச்சியையும் கொண்டு வந்துள்ளது. அதன் காரணமாக பல ஆண்டுகளாக நாங்கள் சிறப்பாகவே பணியாற்றி இருக்கிறோம். நிதித்துறைக்கு திவ்யாவின் வருகை நிறுவனத்தின் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

தற்போது நிதி அதிகாரியாக இருக்கும் ஸ்டீவன்ஸ்(வயது58) கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து அந்த பதவியில் இருந்து வருகிறார். ஏறக்குறைய 40 ஆண்டுகளாக ஜிஎம் நிறுவனத்தில் ஸ்டீவன்ஸ் பணியாற்றி வருகிறார். ஸ்டீவன்ஸ் ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து நிறுவனத்தின் ஆலோசகராகச் செயல்பட உள்ளார்.


Related News

 • டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி
 • இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 11-வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்
 • அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.34 ஆக சரிவு
 • ரூ.5000 கோடி வங்கிக் கடன் மோசடி – குஜராத் தொழிலதிபர் நைஜீரியாவில் பதுங்கல்?
 • புதிய வடிவமைப்பில் சுசுகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
 • டொயோட்டா இன்னோவா புதிய விலை
 • வரலாற்றில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி – டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு மேலும் சரிவு
 • ரூபாய் நோட்டால் தொற்றுநோய்கள் பரவுகிறதா?
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *