ரிலையன்ஸ்-ஏர்செல் இணைகிறது

Facebook Cover V02

india1409தொலை தொடர்பு துறையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் – ஏர்செல் நிறுவனங்களின் இணைப்பு நடைபெற  உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கம்பியில்லா தொலைபேசி சேவைப்பிரிவு ஏர்செல்லுடன் இணைக்கப்பட உள்ளது.

இரண்டு நிறுவனங்களும் இணைந்து புதிதாக உருவாக்கப்பட உள்ள  நிறுவனத்தில் இரண்டு நிறுவனங்களும் தலா 50 சதவீத பங்குகளை  வைத்திருக்கும். இணைப்புக்குப் பிறகு நிறுவனங்களின் மொத்த மதிப்பு 35 ஆயிரம் கோடியாகவும், கடன் மதிப்பு 14 ஆயிரம் கோடியாகவும்  இருக்கும்.

இணைப்புக்கு பிறகு இந்த நிறுவனம் 19 கோடி பயனாளர்களுடன் இந்திய தொலை  தொடர்பு துறையின்   இரண்டாவது பெரிய நிறுவனமாக இது விளங்கும்.   25 கோடி வாடிக்கையாளர்களுடன் ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது.

Share This Post

Post Comment