ஹுண்டாயின் புதிய ஆட்டோமேட்டிக் ரக எலைட் ஐ20 கார் அறிமுகம்

ekuruvi-aiya8-X3

can_1309ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய ஆட்டோமேட்டிக் ரக எலைட் ஐ20 ரக காரை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.

அந்நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா புது தில்லியில் அந்த மாடலை அறிமுகம் செய்து வைத்துக் கூறியதாவது:

சிறிய வகை கார்களில் பிரீமியம் பிரிவில் ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ20 தனித்துவம் மிக்கது. இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் ஆதரவை இந்த மாடல் பெற்றுள்ளது. நாட்டில் 10 லட்சம் ஐ20 கார்கள் விற்பனையாகியுள்ளதே இதற்கு நல்ல சான்று. அந்த மாடலை மேம்படுத்தி புதிய எலைட் ஐ20 மாடலை இப்போது அறிமுகம் செய்கிறோம்.

ஆட்டோமேட்டிக் கியர்கள் அமைந்துள்ள இந்தப் புதிய மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. தானியங்கி கதவு லாக் செய்யும் வசதி இதில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்காக 6 ஏர்பேகுகள் அமைக்கப்பட்டுள்ளன. புது தில்லியில் இதன் விற்பனையக விலை ரூ. 9.01 லட்சம் முதல் இருக்கும் என்றார் அவர்.

பல்வேறு பிரிவுகளில் 10 மாடல்களில் கார்களை சென்னை அருகே உள்ள ஆலையில் உருவாக்கி விற்பனை செய்து வருகிறது ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம். இந்நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய கார் ஏற்றுமதியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment