டிவிஎஸ் மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீட்டு விவரம்

Facebook Cover V02

TVS-iQubeடிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஐக்யூப் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட தயாரித்து வருகிறது. இந்தியாவில் ஐக்யூப் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

முன்னதாக 2010 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டர் அறிமுகம் முதன்முதலில் செய்யப்பட்டது. ஹைப்ரிட் ஸ்கூட்டர் 100சிசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் 150Wh மற்றும் 500Wh என இருவித பேட்டரி ஆப்ஷன்களுடன் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இதன் எலெக்ட்ரிக் மோட்டார்கள் எகனாமி மற்றும் பவர் ரைடிங் மோட்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டிவிஎஸ் ஐக்யூப் வேகம் மணிக்கு 20 கீலோமீட்டருக்கும் குறைவாக இருக்கும் போது முழுமையாக எலெக்ட்ரிக் திறனை பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் அதிக வேகத்தில் செல்லும் போது பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்கும்.

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட வடிவமைப்பில் கூடுதலாக புதிய நிறங்களில் டிவிஎஸ் ஐக்யூய் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், டிவிஎஸ் தனது ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய தயார்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் டிவிஎஸ் ஹைப்ரிட் ஸ்கூட்டர் தயாரிப்பு பணிகள் துவங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் டிவிஎஸ் ஐக்யூப் விலை மற்ற நிறுவன மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசின் நிதியுதவியை பெற அந்நிறுவனம் முயற்சிக்கலாம்.

Share This Post

Post Comment