அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய பணம் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி

அன்னிய செலாவணியின் இருப்பு மாற்றம், கச்சா எண்ணை விலை உயர்வு போன்ற காணரங்களால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது.

இதை தடுக்க மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும், உரிய பலன்கள் கிடைக்காமல் இந்திய பண மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இல்லை என்ற நிதி கொள்கை முடிவை அறிவித்தது. இதனால் ரூபாயின் மதிப்பு இன்னும் வீழ்ச்சி அடைந்து 74 ரூபாய் 22 காசு ஆனது.

indian-money-valueஅதன் பிறகு சற்று பணத்தின் மதிப்பில் எழுச்சி ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை 73 ரூபாய் 76 காசாக இருந்தது. நேற்று மார்க்கெட் ஆரம்பமான போது அதில் 14 காசு உயர்ந்து இருந்தது.

அதன் பிறகு அதிகபட்சமாக 74 ரூபாய் 10 காசு ஆனது. நேற்றைய மார்க்கெட் முடிவில் 74 ரூபாய் 6 காசாக இருந்தது.

இத்தனைக்கும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை 4 டாலர் வரை குறைந்துள்ளது. 4 நாட்களுக்கு முன்பு ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 86.74 டாலராக இருந்தது. அது, இப்போது 82.89 டாலராக குறைந்துள்ளது.

கச்சா எண்ணை விலையின் தாக்கத்தால் தான் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாக கூறினார்கள். ஆனால், கச்சா எண்ணை விலை வீழ்ச்சி அடைந்த போதும் இந்திய ரூபாயின் மதிப்பு உயராமல் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது.

இதுபற்றி ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறும் போது, அன்னிய செலாவணி வர்த்தகத்தில் ஒரு நிலையற்ற தன்மை நிலவியதால் பணத்தின் மதிப்பு மீண்டும் வீழ்ந்துள்ளது என்று கூறினார்.






Related News

  • டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி
  • இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 11-வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்
  • அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.34 ஆக சரிவு
  • ரூ.5000 கோடி வங்கிக் கடன் மோசடி – குஜராத் தொழிலதிபர் நைஜீரியாவில் பதுங்கல்?
  • புதிய வடிவமைப்பில் சுசுகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
  • டொயோட்டா இன்னோவா புதிய விலை
  • வரலாற்றில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி – டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு மேலும் சரிவு
  • ரூபாய் நோட்டால் தொற்றுநோய்கள் பரவுகிறதா?
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *