போர்ஷே கேயின் டர்போ அறிமுகம்

ekuruvi-aiya8-X3

porche cayenne-tourboசொகுசு கார்களை தயாரிக்கும் ஜெர்மனியின் போர்ஷே நிறுவனம் மூன்றாம் தலைமுறை கேயின் டர்போ எஸ்யுவி மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. 550 ஹெச்பி திறன் கொண்ட இந்த கார் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட இது எடை குறைவானது.

நான்கு லிட்டர் வி8 பை-டர்போ என்ஜின் இருப்பதால் 4.1 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்ட முடியும். இதில் அதிகபட்ச வேகமாக மணிக்கு 286 கி.மீ வேகத்தில் பயணிக்க முடியும்.

பிரத்யேகமான முகப்பு விளக்குகள், 21 அங்குல அகலமான டர்போ சக்கரங்கள், இரட்டை சைலன்ஸர் ஆகியன இதன் சிறப்பம்சமாகும். துல்லியமான இசையைக் கேட்க வசதியாக 710 வாட்ஸ் போஷ் ஆடியோ சிஸ்டம், சொகுசான இருக்கைகள், பல்வேறு செயல்பாடுகளைக் கொண்ட ஸ்டீரிங் ஆகியன ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்குரிய தோற்றத்தையும், செயல்பாடுகளையும் அளிக்கிறது. 5 வகையான முன்னரே திட்டமிடப்பட்ட டிரைவ் மோட் வசதி இருப்பதால் சாலை மற்றும் சாகசப் பயணத்துக்கேற்ப மாற்றிக் கொள்ள முடியும்.

இம்மாதம் முதல் இந்த கார் இந்தியாவிலும் கிடைக்கும். பேசிக் மாடல் ரூ. 99.91 லட்சமாகும். அதிகபட்சமாக உயர் மதிப்பு கொண்ட காரின் விலை ரூ. 2.44 கோடியாகும்.

Share This Post

Post Comment