மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு

sdsd

arun_jetley1மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கப்படுவதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார். கடந்த ஆண்டு விளையாட்டுத்துறைக்கு ரூ.1,592 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.351 கோடி உயர்த்தப்பட்டுள்ளது.

2018-ம்ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டு போன்ற முக்கியமான போட்டிகள் நடக்கின்றன. இதற்கு வீரர், வீராங்கனைகள் தயாராவதற்கு ஆகும் செலவினங்களை கருத்தில் கொண்டு இந்த கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய விளையாட்டு ஆணையம் தேசிய அளவிலான விளையாட்டு முகாம்கள் நடத்துவதற்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.416 கோடியில் இருந்து ரூ.481 கோடியாக உயர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதி ரூ.185 கோடியில் இருந்து ரூ.302 கோடியாக உயருகிறது. அதே சமயம் தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி ரூ.5 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக குறைக்கப்படுகிறது. திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களது திறமையை வளர்க்க வெறும் ரூ.50 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் ஒட்டுமொத்த நிதியில் இருந்து பிரித்து கொடுக்கப்படும்.

Share This Post

Post Comment