இலங்கை அரசின் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்

budget-2018நாட்டின் பொருளாதாரத்தினை மீளவும் சரியான தடத்தில் முன்னெடுத்துச் செல்வதனை இலக்காகக் கொண்டு ‘நீலப்பசுமை’ என்னும் தொனிப் பொருளில் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதிலிருந்து சில செய்திகள்

வடக்கு – கிழக்கில் மக்களின் குடியமர்வுக்கு 300 கோடி ரூபா நிதி

வடக்கு – கிழக்கில் மக்களின் மீளக்குடியமரும் நடவடிக்கைக்காக 300 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, இலங்கையின் பொருளாதாரத்துக்கு முக்கிய பங்களிப்பு வகிக்கின்ற தோட்டப் பிரதேச மக்களின் லயன் குடியிருப்புகளுக்குப் பதிலாக 25 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட உள்ளன.

யாழ் பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கீடு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் புதிய நூல் நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்காக 20 கோடி மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கும்; திட்டத்துக்காக 75 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தற்போது வழங்கப்படுகின்ற 3,500 ரூபா நிதியுதவி 5,000 ரூபாவாக உயாத்தப்பட்டுள்ளது.

மீன்பிடித்துறையை புனரமைக்க நிதி ஒதுக்கீடு

யாழ்;ப்பாணம் காரைநகர், சிலாபம். பூரணா வெல்ல மற்றும் மிரிஸ்ஸ ஆகிய மீன்பிடித் துறைமுகங்களைப் புனரமைப்பதற்கு 175 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டளவில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி 3 மடங்குகளால் அதிகரிக்கப்படவுள்ளது. அதனை இலக்காகக் கொண்டு, சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய சில உணவுகள் மற்றும் பானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டணத் தீர்வை அகற்றப்படவுள்ளது. அத்துடன் சகல சுற்றுலாத்துறை சேவை வழங்குநர்களையும் இலங்கைச் சுற்றுலாத்துறைச் சபையின் கீழ் பதிவு செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பனை வளத்தை மேம்படுத்த 40 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு

நெடுந்தீவு, கிளிநொச்சிப் பகுதிப் பிரதேசங்களில் உள்ள பனை வளத்தை மேம்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. மீனைக் களஞ்சியப்படுத்துவதற்கான குளிர்சாதன வசதிகளுக்காக 15 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அச்சுவேலி தொழிற்பேட்டையில் மின்சார வசதிகளை மேற்கொள்வதற்கான செலவில் 50 சதவீதத்தை அரசு பொறுப்பேற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனோர் செயலகத்தைச் செயற்படுத்துவதற்கு 140 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு

இலங்கையில் காணாமற்போனோர் பிரச்சினைக்குத் தீர்வாக அமையவுள்ள காணாமற்போனோர் செயலகத்தைச் செயற்படுத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 140 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அரசு அளித்த வாக்குறுதிக்கு அமைவாக, குறித்த அலுவலகத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும் அதனைச் செயற்படுத்த முடியாமல் இழுபறியில் காணப்பட்டுவந்த நிலையில், தற்போது அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இந்த அலுவலகம் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நிர்மாணிப்பதற்கு 300 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு

இலங்கையில் இன்னும் ஐந்து வருடங்களில் தொழில்நுட்பப் பல்கலைக்கழம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு 300 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தகவல் தொழில்நுட்ப அபிவிருத்திக்கு 300 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் காலநிலை அவதான நிலையத்தை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பவுள்ளது.

மேலும், சுயதொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டத்துக்கு 50 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு 300 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா அமைதிப்படைக்குச் செல்லும் அமைதிப்படை இராணுவத்துக்கு 75 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு

ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றச் செல்லும் இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சியளிப்பதற்காக 75 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்பப்படும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஐ.நா கோரியுள்ளதாகவும், இதனடிப்படையில் எதிர்காலத்தில் அவர்களுக்குரிய பயிற்சிகளை வழங்க இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மின்சார முச்சக்கர வண்டிகளுக்கு 90 சதவீத வரிக்குறைப்பு

இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளுக்கு 90 வீத வரி விலக்க வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலத்திரனியல் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கும் இறக்குமதி வரிகள் தளர்த்தப்படும் என்பதுடன், இலத்திரனியல் வாகனங்களுக்கான வரி 10 இலட்சம் ரூபா வரையில் குறைக்கப்படவுள்ளது.
சகல அரச வாகனங்களும் 2025 ஆம் ஆண்டில் இலத்திரனியல் வாகனங்களாக மாற்றப்படுவதோடு 2040ஆம் ஆண்டளவில் எரிபொருள் அல்லாத வாகனங்களைக் கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

 • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
 • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
 • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
 • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
 • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
 • கட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்
 • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
 • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *