இந்தியாவின் பாதுகாப்பு ரகசியங்கள் குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் அளித்த எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது

மராட்டிய மாநிலம் லாதூர் மாவட்டம் ரன்பூரா கிராமத்தை சேர்ந்தவர் ஷேக் ரியாசுதீன். இவர் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக இவரது நடவடிக்கைகளில் புலனாய்வு பிரிவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் அவரை கடந்த சில மாதங்களாக தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஏஜெண்ட் மிர்சா பைசல் என்பவரிடம் இந்திய எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலிகள் மற்றும் சாலைகள் குறித்த புகைப்படங்கள், மூத்த அதிகாரிகளின் மொபைல் எண்கள் மற்றும் சில ரகசிய தகவல்களை பறிமாறி உள்ளார்.
இதனையடுத்து பி.எஸ்.எப். உயர் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், மம்தாத் போலீசார் ஷேக் ரியாசுதீனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர் தனது மொபைல் போல் மற்றும் பேஸ்புக் மெஞ்சர் மூலம் தகவல்களை பரிமாறி உள்ளார். அவர் மீது அலுவலக ரகசிய சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து உயர் அதிகாரி ரஞ்சித் சிங் கூறுகையில்,
எல்லை பாதுகாப்பு படை வீரர் ஷேக் ரியாசுதீன் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யிடம் தொடர்பில் இருந்தாகவும், இந்தியாவின் பாதுகாப்பு குறித்து முக்கிய தகவல்களை பறிமாறி கொண்டார் என்று தகவல் கிடைத்தது. சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.





Related News

  • நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி
  • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
  • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
  • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
  • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
  • சபரிமலை சம்பவம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு
  • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
  • கஜா புயல் எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *