பில்லி சூனியம் வைப்பதாக பாலியல் தொழிலுக்கு பெண்களை கடத்திய நர்சுக்கு 14 ஆண்டு சிறை

British-Hospital-Nurseலைபீரியாவில் பிறந்து இங்கிலாந்தில் நர்ஸ் வேலை பார்த்து அங்கு குடியுரிமை பெற்ற ஜோசப்பின் இயாமு ( 51), நைஜீரியாவில் கிராமப்பகுதிகளில் உள்ள பெண்கள் முன்னேற்றத்திற்காக ஒரு அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். பின்னர் ஐரோப்பாவில் சொகுசான வாழ்க்கை அமைத்து தருவதாக வாக்களித்து பெண்களை அவர் ஜெர்மனிக்கு கடத்துவார்.
பெண்களைக் கடத்தும் முன், கோழிகளின் இதயத்தை உண்ணுதல், இரத்தத்தைக் குடித்தல், உடலைக் கீறிக்கொள்ளுதல் போன்ற நிகழ்வுகளைக் கொண்ட மதச் சடங்கு ஒன்றை நடத்தும் ஜோசப்பின்  அந்த பெண்களிடம் தனக்கு 38,000 டாலர்கள் கொடுக்க வேண்டும் என்றும், எங்கும் ஓடிப்போக மாட்டோம் என்றும், போலீசுக்கு தகவல் கொடுக்க மாட்டோம் என்றும் சத்தியம் வாங்கிக் கொள்வார்.
இம்முறை ஜோசப்பின்  ஐந்து நைஜீரியப் பெண்களை ஆசை காட்டி படகு ஒன்றில் ஏற்றி ஜெமனிக்கு அனுப்பினார். அங்கு சென்றதும் அந்தப் பெண்கள் பாலியல் விடுதி ஒன்றில் பாலியல் தொழில் செய்ய வற்புறுத்தப்பட்டார்கள். மாதம் தனக்கு 1,500 யூரோக்கள் அனுப்ப வேண்டும் என்றும் மறுத்தால் அந்தப் பெண்களின் குடும்பத்தினருக்கு பில்லி சூனியம் வைப்பதாக மிரட்டலும் விடுத்தார் ஜோசப்பின்.
இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள பாலியல் விடுதி ஒன்றின் உரிமையாளர் அந்த ஐந்து பெண்களில் ஒரு பெண்ணின் பாஸ்போர்ட் போலி என சந்தேகம் ஏற்பட்டதன் பேரில் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரிக்கத் தொடங்கிய ஜெர்மன் போலீசார், இங்கிலாந்து மற்றும் நைஜீரிய போலீசாருடன் இணைந்து மேற்கொண்ட வேட்டையின் முடிவாக இங்கிலாந்து போலீசார் ஜோசப்பினை கைது  செய்தனர் . இந்த வழக்கை 10 பெண் நீதிபதிகள் உள்ளிட்ட 11 நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்தது. இதில் ஜோசப்பினுக்கு14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related News

 • அமெரிக்க அதிபருக்கு, அடிப்படை நாகரீகம் கூட இல்லை – பிரான்ஸ் கண்டனம்
 • சிங்கப்பூரில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை
 • இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் – சீனா நம்பிக்கை
 • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
 • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
 • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
 • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
 • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *