போர்க்குற்றவாளி பிரிகேடியர் தேசப்பிரிய கைது

ekuruvi-aiya8-X3

desapriya_brikediyarவெலிவேரிய- ரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்த்தன நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

2013ஆம் ஆண்டு 1 ஆம் நாள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீது சிறிலங்கா இராணுவத்தினர் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர். இதில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 33பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தை விசாரணை செய்த சிறிலங்கா அரசாங்கம் 3 இராணுவ அதிகாரிகளைக் கைதுசெய்திருந்தது.

இந்நிலையிலேயே, நேற்றையதினம் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு பணித்த பிரிகேடியர் குணவர்த்தன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்த்தன, இறுதி யுத்தத்தின்போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான 58 ஆவது டிவிசனின் முதலாவது பிரிகேட்டுக்கு தலைமைதாங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment