வேலை தேடும் இளைஞர்களுக்கான வழிகாட்டல் நூல் வெளியீடு

ekuruvi-aiya8-X3

books1பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்கள் மற்றும் அரச வேலை தேடும் இளைஞர், யுவதிகளுக்கான வழிகாட்டல் நூல் இன்று மாலை 5.30 மணிக்கு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் ஆகியோரால் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

ஈ.ஆர்.பிரணவா மற்றும் ஏ.கொன்சன் சேவியர் என்ற இரு தமிழ் இளைஞர்கள் இந்த நூலை உருவாக்கியுள்ளனர் .இந்த நூல் குறித்து நேற்று காலை யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நூலை உருவாக்கிய இளைஞர்கள் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில், க.பொ.த சாதாரணதரம் மற்றும், க.பொத.உயர்தரம் நிறைவு செய்த பின்னர் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்கள் அடுத்த கட்டம் என்ன செய்வது என தெரியாத நிலையில் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கிறார்கள். இதனால் பல மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகும் நிலையும் உள்ளது.

இதேபோல் தமிழ் இளைஞர், யுவதிகளும் சரி சிங்கள இளைஞர், யுவதிகளும் சரி அரச வேலைவாய்ப்பை பெறுவதற்கு பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இவர்களை மையப்படுத்தி அதாவது இவர்களுடைய தேவைகளை கருத்தில் கொண்டு “த ஹை ட்” என்ற பெயரில் ஒன்றரை வருடம் உழைப்பின் மூலமாக இந்த நூலை உருவாக்கியிருக்கின்றோம். இந்த நூல் ஊடாக பாடசாலை கல்வியை நிறைவு செய்துள்ள மாணவர்கள், அரச வேலை தேடும் இளைஞர் யுவதிகள் அதிகம் நன்மையடைவார்கள் . அதேபோல் அரசாங்கம் கல்வியை தொடர விரும்புகிறவர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் நிறைய வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது. அந்த வாய்ப்புக்களை சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியாமையினாலேயே எமது சகோதரர்கள் பல கஸ்டங்களை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் கூறினர். இந்த நூல் இன்று மாலை 5.30 மணிக்கு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சர் க.சர்வவேஸ் வரன் ஆகியோரால் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

Share This Post

Post Comment