காந்திக்கு ரூ. 3 லட்சம்- மோடிக்கு ரூ.59 லட்சம்: மகாராஷ்டிரா அரசு பாரபட்சம்

ekuruvi-aiya8-X3

Modi_02மகாராஷ்டிராவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் பற்றி புத்தகங்களை வாங்குவதில் மோடி பற்றி புத்தகங்கள் மட்டும் அதிக எண்ணிக்கையில் ரூ. 59 லட்சம் வரையில் கொள்முதல் செய்ததாக எதிர்கட்சிகள் புகார் கூறினர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் பற்றி புத்தகங்களை வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதன்படி முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பற்றிய புத்தகம் 1,635,க்கும், தேசதந்தை மகாத்மா காந்தி பற்றி ரூ.3 லட்சத்து 25ஆயிரம் மதிப்பில் 4,343 புத்தகங்களும், சட்டமேதை அம்பேத்கர் பற்றி ரூ. 24 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களும், பிரதமர் மோடி பற்றி ரூ. 59 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் 1,49,954 புத்தகங்களும் கொள்முதல் செய்யப்பட்டது.

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட காந்தி உள்ளிட்டோரின் புத்தகங்களை குறைந்த எண்ணிக்கை கொள்முதல் செய்து, பிரதமர் மோடிக்கு மட்டும் அதிக எண்ணிக்கையிலான புத்தகங்கள் கொள்முதல் செய்ததன் மூலம் மகாராஷ்டிரா அரசு பாரபட்சம் காட்டப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறினர்.

இதனை கல்விஅமைச்சர் மறுத்துள்ளார். விதிமுறைகளின் படியே புத்தகங்கள் வாங்கப்பட்டது என்றார்.

Share This Post

Post Comment