‘ப்ளூ வேல்’ விளையாடிய மாணவர் தற்கொலை

ekuruvi-aiya8-X3

bluvel3புதுச்சேரி பல்கலைகழகத்தில் அசாமை சேர்ந்த மாணவர் சசிகுமார் ‛ப்ளூ வேல்’ ஆன்லைன் கேம் விளையாடி தற்கொலை செய்து கொண்டார்.

இணையதளத்தில், ‘ப்ளூ வேல்’ என்ற அபாயகரமான விளையாட்டு, மாணவர்களை மரண குழியில் தள்ளி வருகிறது. மும்பை, கேரளா போன்ற மாநிலங்களில் மட்டும் பரவிய இந்த விளையாட்டு, தமிழகத்தில் தற்போது புகுந்துள்ளது. மதுரையில் இந்த விளையாட்டுக்கு, ஒரு மாணவர் பலியாகியுள்ளார்.

இந்நிலையில் புதுச்சேரி பல்கலையில் பயிலும் முதலாமாண்டு எம்.பி.ஏ., மாணவர் சசிகுமார், இந்த விளையாட்டுக்கு அடுத்த பலியாகினார். அசாமை சேர்ந்த மாணவரான சசிகுமார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சசிகுமாரின் மொபைலில் இருந்து புளூவேல் தொடர்பான லிங்குகள் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Post

Post Comment