எம்.எல்.ஏக்களுக்கு ரூ.100 கோடி குமாரசாமி குற்றச்சாட்டு பாரதீய ஜனதா மறுப்பு

Facebook Cover V02
kumaraswamyகர்நாடக சட்டமன்ற மதச்சார்பற்ற ஜனதா தள குழு தலைவராக குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது  பாரதீய ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் உடன் மட்டுமே கூட்டணி. ரூ.100 கோடி தருகிறேன், அமைச்சர் பதவி தருகிறேன் என  எம்.எல்.ஏக்களுக்கு பாரதீய ஜனதா ஆசை காட்டுகிறது. குதிரை பேரம் நடத்துகிறது என குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சரும் கர்நாடக பாரதீயஜனதா பொறுப்பாளருமான  பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-
ரூ. 100 கோடி நாங்கள் கொடுப்பதாக கூறப்படுவது கற்பனை மட்டும் அல்ல. காங்கிரஸ்- ஜனதா தளம் (எஸ்) நடத்தும் அரசியல் ஆகும். நாங்கள் விதிப்படி நடக்கிறோம். நாங்கள் எங்கள் கோரிக்கையை கவர்னரிடம் வைத்து உள்ளோம் நாங்கள் நிச்சயமாக அரசு அமைப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சட்டுகளை சுமத்துகிறார்கள். இதில், காங்கிரஸ்காரர்கள் புகழ் பெற்றவர்கள். அவர்களது சொந்த எம்.எல்.ஏக்கள் அந்த  கூட்டணியில் மகிழ்ச்சியாக இல்லை என  பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

Share This Post

Post Comment