ஜூலி வெளியேற்றமும் – வெளியில் உள்ள ஜூலிக்களும்…!!

ekuruvi-aiya8-X3

( பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்காக மட்டும் )

இன்று ஞாயிறுக்கிழமை (06- 08 – 2017)பிக்பாஸ் நிகழ்விலிருந்து ஜூலி வெளியிற்றப்பட்டார் . அதனை தொடர்ந்து கமலகாசன் மற்றும் ஜூலி உரையாடல் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது

20663927_1177239122421254_29487631368975978_n

இந்த சமூக வலைத்தளங்கள் திட்டித் தீர்ப்பது போல ஜூலி ஒன்றும் அவ்வளவு மோசமானவர் அல்ல. எமது சமூகத்தில் உள்ள 90% பெண்களின் பிரதிநிதி அவர். ( ஆண்களின்… என்றுகூட சொல்லலாம் )

பொய் சொல்லுவது, ஒரு கதையை இன்னொரு விதமாக மாற்றிச் சொல்லுவது, புறங்கூறுவது, சிறு பதவியோ பணமோ கிடைத்தவுடன் தன்னிலை மறந்து செயல்படுவது என்று எமது சமூகத்தில் பல கோடி ‘ஜூலிக்கள்’ உள்ளனர். மேலே சொன்ன 90% கணக்கு இதுதான்.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி மட்டுமே ‘செலிபிரட்டி’ அல்லாதவர். அவர் திரையில் பார்த்து வியந்த நட்சத்திரங்களுடன் ஒன்று சேர்ந்து, அவர்களுக்கு ஈக்குவலான வாழ்க்கை வாழ ஒரு வாய்ப்பு வந்தபோது அவர் தடுமாறிவிட்டார். நட்சத்திரங்களின் ஆளுமைக்கு முன்னால், தன்னுடைய ஆளுமையை நிலை நிறுத்துவது, வெறும் நாற்பது நாட்களில் அவரால் முடியாமல் போயிற்று..!

இந்த ஆளுமைப் பிரச்சனை, ஜூலிக்கு மட்டுமல்ல நான் முன்பு சொன்ன அந்த 90% பேரிடமும் இருக்கிறது. சினிமா நட்சத்திரம் ஒன்றை நேரில் காணும்போது இவர்கள் ‘குழைந்து வளையும்’ காட்சியை நான் பல முறை கண்டிருக்கிறேன். சினிமா ஆட்களுடன் ‘செல்பி’ எடுக்க முண்டியடிக்கும் போதும், அவர்களுடன் பேசும்போது ஒழுங்காகப் பேசாமல் மென்று விழுங்கும் போதும் இவர்களின் ஆளுமை காணாமல் போய்விடுகிறது.

அவ்வளவு ஏன்? ஊரில் உள்ள ஒரு கோயில் தலைவருடனோ, ஒரு பணக்காரனுடனோ, அரச அதிகாரிகளுடனோ பேசும்போது தம் ஆளுமையைத் தொலைத்துவிட்டு ‘பதறிச் சிதறும்’ பலரை நான் பார்த்திருக்கிறேன். இவை எல்லாவற்றையும்விட, ஒரு அழகான பெண்ணிடம் பேசும் போது அவளது கண்களைப் பார்த்து பேசாமல், வேறு பக்கம் பார்த்துக்கொண்டு எச்சிலை விழுங்கி விழுங்கிப் பேசும் பல ‘ஆளுமை’ களையும் நான் கண்டிருக்கிறேன்.

நாம் என்ன வெள்ளைக்காரர்களா? சின்ன வயதில் இருந்தே ஆளுமையுடன் வளர? அவர்கள் தம் ஜனாதிபதியை எதிரிலே கண்டாலும் ஒரு சின்ன ‘ஹாய்’ உடன் கடந்து போவார்கள். நாமோ நம்மூர் ‘வட்டச்செயலாளர்களுக்கே’ சலாம் போட நினைப்போம்..!

இப்படியான எமது சமூகத்தின் ஒரு சாதாரண பெண் ஜூலி, திடீரென்று நமீதா, ஓவியா, ஆரவ் என்று ‘பெரிய தலைகளைக்’ காணும்போது தடுமாறியே விட்டார். அவர்களோடு தன்னை ‘சமநிலை’ப்படுத்த ஜூலி மேற்கொண்ட முயற்சிகளின் குளறுபடிகளைத்தான் நாம் கடந்த 40 நாட்களாக கண்டோம்..!

அதிலும் ‘காயத்திரி, சக்தி’ போன்ற பசுத்தோல் போத்திய புலிகள், ஜூலிக்கு கொடுத்த பிரசர் ஏராளம். இவர்களை எல்லாம் ‘காக்கா’ பிடிக்க ஜூலி மேற்கொண்ட முயற்சிகளும் ஏராளம்.

அவர்கள் எல்லோரும் ஜூலி குறித்துப் பேசிய ‘அழகான’ வசனங்களை கமல் இன்று போட்டுக் காட்டியிருந்தார்.

எனக்கு இன்னமும் பதில் தெரியாத கேள்வி என்னவென்றால் எமது சமூகத்தில் உள்ள 90% ஜூலிக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, அவர்களின் ‘அகத்தை’ திரையில்காட்டும் ‘பிக்பாஸ் ஜூலியை’ ஏன் திட்டுகிறார்கள்? என்பதுதான்…!!!!!

Thanks

Rajeevan Ramalingam

Share This Post

Post Comment