ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒபாமா – கண்கலங்கினார் பிடேன்

obama1_3117786fஜனநாயக கட்சியைச் சேர்ந்த அமெரிக்க ஜனாதிபதி பெரக் ஒபாமாவின் ஆட்சிக் காலம் எதிர்வரும் 20-ம் திகதியுடன் நிறைவடைகிறது.

அவரோடு 8 ஆண்டுகள் துணை ஜனாதிபதியாக ஜோ பிடேன் பணியாற்றி வந்தார்.

புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜோ பிடேனுக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதான ‘மெடல் ஆப் பிரீடம்’ (சுதந்திர விருது) விருதினை ஜனாதிபதி பெரக் ஒபாமா அறிவித்தார்.

விருது குறித்து பிடேனுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை.

திடீரென நாட்டின் மிக உயரிய விருது அறிவிக்கப்பட்டதால் தன்னையறியாமல் பிடேன் கண்கலங்கினார்.

ஜனாதிபதி பெரக் ஒபாமா விருதுக்கான பதக்கத்தைப் பிடேனுக்கு அணிவித்தபோதும் அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

நன்றி உரை நிகழ்த்திய பிடேன், இந்த விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை. எனினும் இதனைப் பணிவோடு ஏற்றுக் கொள்கிறேன். அமெரிக்காவின் மிகச் சிறந்த ஜனாதிபதி பராக் ஒபாமா. அவரோடு இணைந்து பணியாற்றியதில் மிகுந்த பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

Share This Post

Post Comment