ஐநா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்தார்!

ekuruvi-aiya8-X3

un-ஐநாவின் சிறப்பு அறிக்கையாளரான பென் எமர்சன் அனுராதபுரச் சிறையிலுள்ள எட்டு வருடங்களுக்கு மேல் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் கைதிகளின் மனித உரிமைகளைப் பாதித்திருக்கின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே பென் எமர்சன் குழுவினர் சிறிலங்காவுக்குப் பயணம்செய்தனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் இந்தக் கைதிகளின் மனித உரிமைகளைப் பாதித்திருக்கின்றதா, நிலைமை என்ன என்பதை அவர்கள் கேட்டறிந்துள்ளனர்.

அத்துடன் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விடுதலையான தமிழ் அரசியல் கைதிகளையும் சந்தித்து சிறை வாழ்க்கையின் பின்னர், அவர்களின் வாழ்க்கை நிலமைகள், மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பாகக் கேட்டறிந்தனர்.

அதன் பின்னர், வவுனியா மேல் நீதிமன்ற மண்டபத்தில் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ரீ.என்.ஏ.மனாப் மற்றும் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகளையும் பென் எமர்ஸன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது..

இந்தச் சந்திப்பின்போது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளில் மனித உரிமை நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிகின்றது

Share This Post

Post Comment