14ம் திகதிக்கு முன்னர் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவைக்கான அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளும் பணி நிறைவடையும் என்று அமைச்சரும் அமைச்சரவை ஊடகப்பேச்சாளருமான மகிந்த சமரசிங்க இன்று தெரிவித்தார்.

இதற்கான வர்த்தமானி அறிப்பு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும். அதனடிப்படையில் பாராளுமன்றத்தில் ஆசன ஒதுக்கீட்டு நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்

தற்பொழுது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அரச கட்சியை கொண்டிருப்பதாகவும் அதன் எண்ணிக்கை 117 ஆகும் என்றும் அமைச்சரும் ஊடகப்பேச்சளருமான மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் அமைச்சரவை நியமனங்கள் தொடர்பாக கேள்வியெழுப்பியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டதுடன், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமக்கே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்திருப்பது குறித்தும் அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

இந்த நிகழ்வில் மற்றுமொரு ஊடகப்பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரசாங்க தகவல் திணைக்களப்பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ ஆகியோர் கலந்துகொண்டனர்.


Related News

 • எந்தவொரு சூழ்நிலையிலும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதில்லை
 • ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்
 • ராஜபக்சேவுக்கு பெரும் தோல்வி – நாடாளுமன்றத்தில் கடும் அமளி
 • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
 • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
 • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
 • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
 • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *