வங்கிப்பணிகள் முடங்கும் அபாயம் – பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

ekuruvi-aiya8-X3

bank_28வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும், வங்கித்துறையில் மத்திய அரசின் சீர்த்திருத்தங்களை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டங்களில், நாடு முழுவதும் இதில் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பில் மொத்தம் 9 சங்கங்கள் உள்ளன. இவற்றில் பாஜகவின் பாரதீய மஸ்தூர் சங்கத்தின் தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு, தேசிய வங்கி அதிகாரிகள் அமைப்பு ஆகிய இரண்டும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாது என்று தெரிகிறது. மற்ற 7 சங்கங்களும் வேலை நிறுத்ததில் பங்கேற்கின்றன.

பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நே‌ஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகியவை பிப்ரவரி 28-ந்தேதி(இன்று) வங்கி கிளைகளின் பணிகள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்று ஏற்கனவே தங்களது வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டன.

இதனால், தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளில் பணிகள் வெகுவாக பாதிக்கப்படும் என தெரிகிறது.

Share This Post

Post Comment