பீகாரில் ‘மதுவிலக்கை அமல்படுத்தியதால் குற்றங்கள் குறைந்துள்ளது’ – நிதிஷ்குமார்

ekuruvi-aiya8-X3

Nitishkumarபீகார் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதாதளம் கடந்த ஆண்டு மதுவிலக்கை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் அகற்றப்பட்டன. மதுபார்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட கடந்த ஓராண்டில் மாநிலத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து பாட்னா நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முதல்–மந்திரி நிதிஷ்குமார் பேசும்போது, ‘‘மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதால், மாநிலத்தில் பல்வேறு விதமான குற்றங்கள் குறைந்துள்ளன. குறிப்பாக வீட்டில் பெண்கள் மீதான வன்முறை, பொது இடங்களில் பெண்களை கேலி செய்வது போன்றவை வெகுவாக குறைந்து போனது’’ என்றார்.
‘‘பீகாருக்கு வரும் வெளிநாடு மற்றும் இதர மாநில சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. இது வேடிக்கையாக தெரியலாம். ஆனால் அவர்கள் இங்கே மது அருந்தி கொண்டாடுவதற்காக வரவில்லை. கள்ளச்சாராய சாவு இருப்பதால் மதுவிலக்கை ரத்து செய்யவேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இதுபோன்ற ஒருசில மரணங்களுக்காக மதுவிலக்கை ரத்துசெய்ய முடியாது’’ என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

Share This Post

Post Comment